தென்னிந்திய சினிமாவின் இதய துடிப்பாக இருப்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. மிகவும் தன்னடக்கத்துடன் சாந்தமான மனிதரான ஏ.ஆர். ரஹ்மானையே வம்புக்கு இழுத்து விட்டார் நடிகை கஸ்தூரி. இது குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் தகுந்த பதிலடியை இரண்டே வார்த்தைகளில் கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 



தமிழில் பேசிய ஏ.ஆர்.ஆர். மனைவி :


சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட இசை புயல் தனது மனைவியை மேடைக்கு அழைத்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மனைவியிடம் அவரின் கணவர் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு கேட்டுக் கொண்டார். ஏ.ஆர் ரஹ்மான் தனது மனைவியிடம் தமிழில் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு அவரது மனைவி தமிழ் எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதனால் நான் என்னால் முடிந்த அளவிற்கு பேசுகிறேன் என ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசினார். இந்த விஷயத்தை ஹைலைட்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் நடிகை கஸ்தூரி. 


கஸ்தூரி கேள்வி சரியா? 


"என்னது ஏ.ஆர். ரஹ்மான் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்ல குடும்பத்துல என்ன பேசுவாங்க ? அவங்க வீடும் தமிழ்நாட்ல இல்லையா? " என்ற கஸ்தூரியின் ட்வீட் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவங்க வீட்டில அவங்க எந்த மொழில பேசினா உங்களுக்கு என்ன ? அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க என பலரும் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஒரு சிலரோ அவங்க சரியாக தானே கேக்குறாங்க ஆனா அத கேட்டது கஸ்தூரி என்றதால்தான் இந்த விமர்சனங்கள் எழுகின்றன என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். 


வம்புக்கு இழுத்த கஸ்தூரி :


ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் மீது உள்ள மரியாதை தனது மனைவியை தமிழில் பேச சொன்னார். அதை அவர் மேடையில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அது போலவே அவரது மனைவியும் உண்மையை சொல்லி மேடை நாகரிகத்துடன் ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசினார். இதில் என்ன தவறு. இதை ஏன் பூத கண்ணாடியை கொண்டு பார்த்து பெரிதாக்கி கம்முனு இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும் என விமர்சித்து வந்தனர். 


 



ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி :


இப்படி பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வந்த இந்த விஷயங்களை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் இரண்டே வார்த்தைகளில் 'காதலுக்கு மரியாதை' என கஸ்தூரியின் டீவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். இந்த பதிலடியை பார்த்த ஏ.ஆர்.ஆர். ரசிகர்கள் சந்தோஷத்தில் இந்த டீவீட்டை சோசியல் மீடியாவில் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள்.