பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை சன்னி  லியோன் நாளை கலந்து கொள்ள இருந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அருகே இன்று குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செய்தி அந்த சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 



கவர்ச்சி புயல் :


ஆபாச நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட நடிகை சன்னி லியோன் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததன் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றார். அதனை தொடர்ந்து பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக இருந்தவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமானார். சமீபத்தில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தில் லீட் ரோலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 







சிறப்பு விருந்தினர் :


அந்த வகையில் பிரபலமான ஒரு நட்சத்திரமான சன்னி லியோன் இம்பாலில் ஞாயிற்றுக்கிழமையான நாளை நடைபெற இருந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றை சிறப்பு விருந்திரனாக கலந்து கொள்ள இருந்தார். இதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்த சமயத்தில் திடீரென அந்த நிகழ்ச்சி நடக்க இருந்த பகுதியின் அருகில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திடீர் குண்டுவெடிப்பு :


ஃபேஷன் ஷோ நடக்க இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர்  தொலைவில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. அந்த பகுதியை  சுற்றியுள்ள இடங்கள் இந்த அசம்பாவிதத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தின் காரணம் குறித்த முதற்கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 


 






போலீசார் விசாரணை :


ஃபேஷன் ஷோ நடைபெற இருந்த மைதானத்திற்கு அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது என்பதற்காக இது போன்ற குண்டு வேண்டிய அச்சுறுத்தல் நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 


நிகழ்ச்சி நாளை நடைபெறுமா ?


இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாளை நிகழ்ச்சி நடைபெறும் சமயத்தில் நடந்து இருந்தால் பெரிய அளவில் பிரச்சனையாகி இருக்கும். இதனால் நாளை நடைபெற இருந்த ஃபேஷன் ஷோ நடைபெறுமா அதில் சன்னி லியோன் கலந்து கொள்வாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன. இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவம் கடந்த ஜனவரி 25ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.