Ponniyin Selvan | அழகான படகு.. பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்டில்களா? வைரலாகும் போட்டோ! பதறும் படக்குழு!

ஒரு படகின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்ற கலை வேலைப்பாடுகள் கொண்ட படகைப் போலவே அந்தப்படகும் உள்ளது.

Continues below advertisement

கல்கி கிருஷ்ண மூர்த்தியின் "பொன்னியின் செல்வன் " நாவலை மய்யமாக வைத்து புராண கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகிவரும் இந்த படத்தில்  விக்ரம், ஜெயம்  ரவி, கார்த்தி, சரத்குமார்,  ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள் .இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்ரை படக்குழுவினர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.டைட்டில் லுக்கில் 2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.  PS -1 என டைட்டில் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது படத்தின் முதல் பாகம் என்பதும் தெரியவந்துள்ளது. 

Continues below advertisement

இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதம், ஹைதராபாத்தில் 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் 70-வது சதவீதம் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படும் ஒரு படகின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்ற கலை வேலைப்பாடுகள் கொண்ட படகைப் போலவே அந்தப்படகும் உள்ளது. அதனால் இந்தப் புகைப்படம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 


இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தில்  ஐஸ்வர்யா ராய், நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் கசிந்தது. இந்த தகவலை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மகனாக நடிக்கும் மாஸ்டர் ராகவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் பதிவிட்ட உடனே அந்தப்பதிவை நீக்கியுள்ளார் ராகவன். நந்தினியின் மகனாக இளவரசர் வேடத்தில் ராகவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதை அடுத்து ஐஸ்வர்யா ராயை நந்தினியாக பார்க்க அவரது ரசிகர்களும், பொன்னியின் செல்வன் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

முக்கிய கதாநாயகனாக பொன்னியன்செல்வன் கதாபாத்திரத்தில்  ஜெயம்ரவி. பொன்னின்செல்வன் பிரகாஷ்ராஜ் சுந்தர சோழனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர சோழனின் மூத்த மகனாக ஆதித்யா கரிகலனாக விக்ரமும், கிரீடம் இளவரசன் மற்றும் வடக்கு ட்ரூப்ஸின் தளபதியாகவும், த்ரிஷா சோழ இளவரசி குந்தவை கதாபத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .


மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது மிகுந்த பொருட்செலவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்குகின்றனர். தனது இசையமைப்பில், ரவி வர்மா ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாக வந்துள்ளது என்று ரஹ்மான் தெரிவித்திருந்தார் . 2022-ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continues below advertisement
Sponsored Links by Taboola