8 தோட்டாக்கள்..
சில படங்கள் எக்காலத்துக்கும் தொடர்ந்து ரசிகர்களிடையே பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உருவாக்கத்தில் 2016ல் வெளியான 8 தோட்டாக்கள் அந்த ரகம். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி மற்றும் வெற்றி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஜப்பானிய படமான ‘ஸ்ட்ரே டாக்’-ஐ தழுவி உருவாக்கப்பட்டது. தமிழில் 8 தோட்டாக்கள் உருவான பிறகு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அடுத்தடுத்து திரைப்படம் வெளியானது. கன்னடத்தில் 8 எம் எம் புல்லட் என்கிற பெயரில் இது ரீமேக் ஆனது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை அடுத்து படத்தை குறித்து அண்மையில் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
ரஜினி..
அவரது பேட்டியில் இருந்து, ‘படத்தைப் பார்த்துட்டு ஒரு நாள் ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பு வந்ததுமே அவர் படத்தைப் பற்றிப் பேசத்தான் கூப்பிடறாருனு தெரிஞ்சுச்சு. பேசினேன். அந்த முனையில் வேகமாகப் படபடவேன அவர் குரல். ஸ்ரீகணேஷானு கேட்டாரு.ஆமான்னு சொன்னேன். படம் ரொம்ப அருமையா இயக்கியிருக்கிங்கனு சொன்னாரு. அவர் சொன்னாலே பாதி வெற்றினு எங்கள் படக்குழுவுக்குத் தோணுச்சு. அவர் ஆசீர்வாதம் கிடைச்சதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இன்னொரு பக்கம் பேங்க் கொள்ளை பத்தின படம்.
இதை எனக்கு சொன்ன போலீஸ் பாத்திரம் அவர் சொன்ன நரேஷன் எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்துச்சு.போலீசை முழுக்க முழுக்க தவறான கண்ணோட்டத்துல காண்பிக்கிறது ஒரு பொறுப்பான இயக்குநருக்கு அழகா எனக்குத் தெரியலை.அதனால் அந்த பாத்திரங்களையும் கொஞ்சம் கதைக்கு ஏற்ற மாதிரி மாத்தினோம். நாசர் சார் படத்துக்குப் பெரிய பலமாக இருந்தார்’ எனப் பேசினார்.
அவரது 8 தோட்டாக்கள் தெலுங்கில் சேனாபதி என்கிற பெயரில் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.