Redin Kingsley: 47 வயதில் அப்பாவாகப்போகும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! வெளியானது குட் நியூஸ்!

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

ரெடின் கிங்ஸ்லி:

நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தனக்கே உரிய பாணியில், காமெடியில் அலப்பறை செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.  சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னதாகவே, அஜித் குமார் நடிப்பில் வெளியான 'அவள் வருவாளா' படத்தில் குரூப் டான்ஸராக ஸ்கிரீன் அப்பியேரன்ஸ் கொடுத்தார். இதுவே இவரது முதல் அறிமுக படமாகவும் அமைந்தது.

Continues below advertisement

மேலும், சென்னை மற்றும் பெங்களூருவில் அரசு கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த இவர் அதன் மூலம் ஒரு முன்னணி தொழிலதிபராகவும் மாறினார் . நெல்சன் கல்லூரி காலங்களில் அவருடைய டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடனம் அமைத்து கொடுத்த ரெடின் கிங்ஸ்லியை நினைவில் வைத்து கொண்டு,  2016 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து, இயக்கிய' வேட்டை மன்னன்' படத்தில் இவரை நடிக்க வைத்தார். ஆனால் துரிதஷ்டவசமாக அந்த படம் வெளியாகாமல் போனது.

கோலமாவு கோகிலா:

இதையடுத்து 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்தார். இதுவே அவரை காமெடி நடிகராக பார்க்க வைத்த முதல் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய டர்னிங் பாய்ட்டாக அமைத்தது. முன்னணி ஹீரோக்களின் படங்களாக இந்த படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து படு பிஸியான நடிகராக மாறிய ரெடின் கிங்ஸ்லி,  தற்போது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபலமாக உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. சங்கீதா ஏற்கனவே விவாகரத்து பெற்று தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் தான், இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

சீரியல் நடிகை சங்கீதா கர்ப்பம்:

46 வயதில் ரெடிங் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டது, சமூக வளைத்ததில் சில புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், இருவரை பற்றியும் பல வதந்திகள் வெளியாகின. இந்நிலையில் சங்கீதா தற்போது 5-மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola