ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களிலும் ரஜினி ரசிகர்கள் படையப்பா படத்தை கொண்டாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் 2k கிட்ஸ் இப்படத்தில் ரஜினியை இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்டு பேசி வருவது ரஜினி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது
படையப்பா ரிரிலீஸ் வசூல்
1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் படையப்பா. ரஜினி , ரம்யா கிருஷ்ணன் , சிவாஜி கணேசன் , மணிவண்ணன் , ரமேஷ் கண்ணா , செந்தில் , செளந்தர்யா என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். இப்படம் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் 75 ஆவது பிறந்தநாளுக்கு வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே ரஜினி ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர். சென்னை ரோகின் திரையரங்கில் மட்டும் இப்படம் 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையானது.
படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் முதல் நாளில் தமிழ் நாட்டில் 3.15 கோடி வரை வசூல் செய்தது. இரண்டு நாட்களில் உகலளவில் இப்படம் 8 கோடி 35 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஜினி பிரதீப் ரங்கநாதன் கம்பேரிஸன்
ஒருபக்கம் 80 , 90களில் பிறந்த ரஜினி ரசிகர்கள் படையப்பா படத்தை கொண்டாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் 2k கிட்ஸ் சமூக வலைதளங்களில் ரஜினியை பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். படையப்பா படத்தின் காட்சிகளை டியூட் படத்தின் ஊறும் பிளட் பாட்டோடு எடிட் செய்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளார்கள்