பிரசாந்துக்கு ப்ராங்க் கால் : கலாட்டா செய்த லைலா! பார்த்தேன் ரசித்தேன் ரிலீஸாகி 22 வருஷங்களாச்சா?  #22yrsOfParthenRasithen

படத்தின் 22வது ஆண்டை முன்னிட்டு அண்மையில் நடிகர் லைலாவுடன் நேர்காணல் செய்யப்பட்டது.

Continues below advertisement

 

Continues below advertisement

நடிகர் பிரசாந்த், லைலா, சிம்ரன், ரகுவரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன். 2000த்தில் வெளியான இந்தப் படத்தை சரண் இயக்கியிருந்தார். பரத்வாஜ் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார். படத்தின் 22வது ஆண்டை முன்னிட்டு அண்மையில் நடிகர் லைலாவுடன் நேர்காணல் செய்யப்பட்டது. நேர்காணலின் போது நடிகர் பிரசாந்தை நடிகர் லைலா ப்ராங்க் செய்தது பார்வையாளர்களை மிகவும் ரசிக்கச் செய்தது.


நேர்காணல் செய்த நபர், தொகுப்பாளர் ஷோபனா, பேட்டி சமயத்தில் திடீரென பிரசாந்த்துக்கு போன் செய்ய அவரை ப்ராங்க் செய்யத் தொடங்குகிறார் லைலா,”ஹலோ யார் பேசறது” என பிரசாந்த் கேட்க, மறுமுனையில், “நான் ஷோபனா (நேர்காணல் செய்தவர்) உடைய அக்கா ஷோபக்கா பேசறேன்” என்கிறார்.தான் ஷோபக்கா என மீண்டும் மீண்டும் சொல்லவும்.தன்னை யாரோ ப்ராங்க் செய்கிறார்கள் என உஷார் ஆகிறார் பிரசாந்த். இருந்தாலும் அவரால் அது யாரெனக் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனடியாக லைலா தான் யாரெனக் கண்டுப்பிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் பிரசாந்த் தனக்கு ஒரு கோடித் தரவேண்டும் எனக் கலாய்க்கவும் “ஹேய் லைலா...” என்கிறார் பிரசாந்த். 

“அதெப்படி கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிக்கலைனாலும் ஒரு கோடி தரணுமா?” என மேலும் பிரசாந்த் கேட்க...ஆமாம் என லைலா கூறவும் , “அப்போ என்னை கண்டுபிடிக்கலைனாலும் ஒரு கோடி ரூபாயா?” என பிரசாந்த் கேட்கிறார். “இல்லை” என லைலா குறும்பாக பதில் அளிக்கிறார். ‘பாத்திங்களா சார் இந்த ஆம்பிளைங்க நிலைமையே இப்படித்தான்’ என்கிறார் பிரசாந்த். அப்படியே நகைச்சுவையும் கலாட்டாவுமாகத் தொடர்கிறது அவர்களுடைய உரையாடல். 

Continues below advertisement