தனுஷ் நயன்தாரா
மிக அன்மையில் நடந்த நிகழ்வு நயன்தாரா தனுஷ் மோதல். நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயண்படுத்த தனுஷ் என்.ஓ.சி தரவில்லை என நயன்தாரா தனுஷ் மீது குற்றம்சாட்டினார். ஆரம்பத்தில் என்னவோ ஆதரவு அவர் பக்கம் இருந்தது. ஆனால் போகப்போக அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவர அந்த ஆதரவு அப்படியே தனுஷ் பக்கம் திரும்பியது.
மணிமேகலை , பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிn 5 ஆவது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. முந்தைய சீசன்களில் போட்டியாளராக பங்கேற்ற மணிமேகலை இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரியங்கா போட்டியாளராக கலந்துகொண்டார். பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை பிரியங்கா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். முதலில் பிரியங்கா பக்கம் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் பின் மணிமேகலை பக்கம் நியாயம் இருப்பது தெரிந்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ப்ளூ சட்டை விஜய் ஆண்டனி
நல்ல படம் வந்தாலே கழுவி ஊற்றுபவர் நம்ம ப்ளூ சட்டை மாறன். சுமாரான படம் வந்தால் விடுவாரா. விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டார் ப்ளூ சட்டை. அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியின் நடிப்பையும் பிரிந்து மேய்ந்தார். பதிலுக்கு விஜய் ஆண்டனி ப்ளூ சட்டைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். ரோமியோ படத்தை அன்பே சிவம் படம் மாதிரி காலம் கடந்து கொண்டாடிவிடாதீர்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்தார். ரோமியோ படத்தை அன்பே சிவம் படத்தோடு ஒப்பிட்டு பேசியதற்கு இன்னொரு தாக்குதலை தொடுத்தார் ப்ளூ சட்டை. சமூக வலைதளத்தில் இப்படியிருக்க தனது ஹிட்லர் படத்தின் சிறப்பு திரையிடலின் போது ப்ளூ சட்டை மாறனை நேரில் சந்தித்து பேசி சமரசத்திற்கு வந்தார் விஜய் ஆண்டனி.
இளையராஜா வைரமுத்து
பாட்டு பெருசா , வரிகள் பெருசா ? பேர கேட்டதும் அதிருதில்ல. தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா பலருக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து ஒரு பாட்டு மக்கள் மனதில் சென்று சேர்வது வெறும் இசையால் மட்டுமில்ல அதன் வரிகளாலும் தான் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக தாக்கி பேசினார். இளையராஜாவின் ஃபோட்டோவை வைத்து வைரமுத்து வணங்க வேண்டும் , இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து என்கிற பெயரே இருந்திருக்காது." என கங்கை அமரன் தெரிவித்தார்.
அமீர் ஞானவேல் ராஜா
அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் வெளியாகியே 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அந்த படத்தை வைத்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் அமீர் இடையில் இன்னும் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பருத்திவீரன் படத்தில் தனது பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஞானவேல்ராஜா பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார். கொஞ்சம் பொறுமையாக இருந்து பார்த்த சுப்ரமணியபுரம் கும்பல் மொத்தமாக சேர்ந்து அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அப்படியே சைலண்டாகிவிட்டார் நம்ம கங்குவா தயாரிப்பாளர்.
சுசித்ரா கார்த்திக் குமார்
கிட்டதட்ட சினிமாவில் உள்ள பெரும்பாலானவர்களின் மீது சுசித்ரா குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அந்த வகையில் தனது முன்னாள் கணவர் கார்த்தி குமார் தன்பாலின ஈர்ப்பாளர் என வீடியோ வெளியிட்டார். சுசித்ரா சொன்ன கருத்து உண்மையில்லை என்றும் தன்மேல் அவதூறு பரப்பும் விதமாக பேசினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கார்த்திக் குமார் தெரிவித்தார். அப்படியே அவரை விட்டு ஜோதிகா பக்கம் திருமிவிட்டார் சுசித்ரா
சமந்தா லிவர் டாக்டர்
நடிகை சமந்தா தனது யூடியுப் சேனலில் ரசிகர்களுக்கு தவறான மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதாக கூறி லிவர் டாக்டர் என அறியப்படும் பிரபல மருத்துவர் அவரை கடுமையாக தாக்கினார். சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூட அவர் தெரிவித்தார். சமந்தாவும் தன் தரப்பில் பொறுமையாக பதிலளித்தார். ஆனாலும் தப்பு தப்புதான் என தனது தாக்குதலை தொடர்ந்தார் நம்ம லிவர் டாக்டர்