2023-ஆம் ஆண்டு வெளியான படங்களில் இடம்பெற்றிருந்த காதல் பாடல்களும், குத்து பாடலும், வலியை கூறும் பாடல்களும் பெரிதாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, இணையத்தில் வைரலானது. அதில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடனத்தில் கலக்கிய ரஞ்சிதமே முதல் ஜெயிலரின் ஹூக்கும் வரை ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 


வாரிசு - ரஞ்சிதமே


வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ் போடும் அளவுக்கு ஹிட் அடித்துள்ளது. விஜய் மற்றும் மானசி பாடியுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு எஸ் தமன் இசை அமைத்துள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனாவும், விஜய்யும் இணைந்து போட்டிபோட்டு கொண்டு இசைக்கு ஏற்ற நடனத்தை கொடுத்திருப்பார்கள்.



வாரிசு - ஜிமிக்கி பொண்ணு


வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தில் விஜய்யும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடனமாடி இருக்கும் மற்றொரு கமர்ஷியல் ஹிட் பாடல் ஜிமிக்கி பொண்ணு. அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாட, எஸ் தமன் இசை அமைத்திருக்கும் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு விஜய் நடனமாடி அசத்தி இருப்பார். 


வாத்தி- ஒரு தல காதல் 


வெங்கி அத்லூரி இயக்கியுள்ள வாத்தி படத்தில் தனுஷ், சம்யுக்த மேனன் நடித்துள்ளனர். தனுஷ் குரலில் வெளிவந்த வா வாத்தி பாடல் ரசிகர்களை ஈர்த்தது என்றே கூறலாம். ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கும் வா வாத்தி பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். பாடல் வரிகளுக்கு ஏற்ப ஸ்வேதா மோகன் தனது குரலில் வா வாத்தியை பாடி நசத்தி இருப்பார். 


பொன்னியின் செல்வன் 2 - அகநக 


மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் பட்டாளமே நடித்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருந்த அகநக முகநகயே பாடல் வரிகள் ஒவ்வொருவரையும் ரசிக்க வைத்தது. பேரழகில் இளவரசியாக அசத்திய த்ரிஷாவும், கார்த்திக் மீதான மென்மையான காதல் காட்சிகளும் அகநக முகநக பாடலை மீண்டும் மீண்டும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இலங்கியங்களை தழுவி இளங்கோ கிருஷ்ணன் எழுதிய வரிகளுக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது இசை மூலமும், பாடகி சக்திஸ்ரீ கோபாலன் தனது காந்த குரல் மூலமும் உயிர் கொடுத்துள்ளனர். 




விடுதலை - காட்டு மல்லி


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்டு மல்லி பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்த பாடலாக உள்ளது. இசைஞானி இளையராஜா மற்றும் அனன்யா பட் பாடி அசத்தி இருக்கும் காட்டு மல்லி பாடல் இணையத்தில் டிரெண்டாகி அனைவரையும் ரசிக்க வைத்தது. இதற்கு இளையராஜாவே பாடல் வரிகளை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.


விடுதலை - உன்னோடு நடந்தா


இதேபோன்று விடுதலை படத்தில் இடம்பெற்றிருந்த உன்னோடு நடந்தா பாடலும் பெரிதான வரவேற்பை பெற்றது.  சுகா எழுதி இருக்கும் பாடல் வரிகளை தனுஷ் மற்றும் அனன்யா பட் பாடி அசத்தி இருப்பார்கள்.  பாடல் வரிகளுக்கு ஏற்ப இளையராஜா இசை அமைத்து இருப்பார். 




மாமன்னன் - நெஞ்சமே நெஞ்சமே


மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடித்திருக்கும் படம் மாமன்னன். இதில் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷுன் காதலை கூறும் விதமாக இடம்பெற்றிருக்கும் நெஞ்சமே நெஞ்சம் பாடல் அதிகளவில் ரசிகர்களின் விருப்ப பாடலாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் தங்களின் குரலில் நெஞ்சமே நெஞ்சமே பாடலை பாடி அசத்தி இருப்பார்கள். இருவரின் மெல்லிய குரலால் நெஞ்சமே நெஞ்சமே பாடலுக்கு பலரும் ரசிகர்களாகினர். 



மாமன்னன் - தன்னான தானா


மாமன்னனில் வலிகளை எதிரொளிக்கும் பாடலாக இடம்பெற்றிருக்கும் ராசா கண்ணு பாடல் கேட்போரை கண்கலங்க வைக்கும் பாடலாக உள்ளது. வடிவேலுவின் முதிர்ச்சியான குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த ராசா கண்ணு பாடல் ஒவ்வொரு ஆழ் மனதிலும் பதியாமல் இல்லை.


ஜெயிலர் - காவாலா 


நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் ஜெயிலர். ரஜினியின் மாஸ் எண்ட்ரியாக இருக்கும் இருக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாடல், டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. அனிருத் இசை அமைத்திருக்கும் காவாலா பாடலை அவரே பாடி இருந்தார்.



ஜெயிலர் - ஹூக்கும்


’இங்கே நான்தான் கிங்... நான் வச்சதுதான் சட்டம்’ என தொடங்கும் ரஜினியின் மாஸ் வசனத்தில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஹூக்கும் பாடல் இணையத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அனிருத்தின் கூஸ்பம்ப் இசையில் கெத்து காட்டும் ரஜினியின் ஹூக்கும் பாடலை சூப்பர் சுப்பு எழுதி இருக்க அனிருத் பாடி இருப்பார்.