நடிகர் ரஜினிகாந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே ஒரு புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான கமெண்டுகள் விமர்சித்து பதிவிடப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் சேர்ந்து அவர் ஒரு படம் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதன்பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ரஜினி ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரஜினிகாந்த் மீது கடும் விமர்சனம்

இந்த நிலையில் ரஜினிகாந்த் மீது சமீபகாலமாக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் கடைசியில் சில காரணங்களால் வர முடியவில்லை. அதனை அவர் பல நிகழ்வுகளில் ஒப்புக்கொண்டுள்ளார். தன் ரசிகர்களுக்கு இன்றளவும் அதன் ஆதங்கம் இருக்கும் என்பதையும் உணர்ந்துள்ளார். இப்படியான நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் ரஜினிக்கு பொறாமை என்றும், அதிமுக - திமுக விஜய்க்கு எதிராக இணைய ரஜினி தான் மத்தியஸ்தம் பேசினார் எனவும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

எனக்கு எதற்கு விஜய் மீது பொறாமை?

இப்படியான நிலையில் அவர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் முதலமைச்சரானது தனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியாக அமைந்தது என்றும், அவர் முதலமைச்சரானதில் எந்தவித பொறாமையும் இல்லை எனவும் தெரிவித்தார். விஜயையும் என்னையும் ஒப்பீடு செய்வது சரியல்ல என மீண்டுமொரு முறை அவர் தெரிவித்தார். அதேபோல் அதிமுக - திமுக இணைப்புக்கு நான் பேசியதாக சொல்லப்படுகிறது. அத்தகைய கேடு கெட்ட எண்ணம் எனக்கு இல்லை எனவும் பதிலடி கொடுத்தார். 

40 ஆண்டுகால நண்பரான மு.க.ஸ்டாலின், இந்த தேர்தலில் தோற்றது உண்மையிலேயே வருத்தமளிப்பதாகவும், அரசியல் தாண்டிய உறவு இருப்பதால் அவரை நேரில் சந்தித்ததாகவும் ரஜினி தெரிவித்தார். 

ஒரே போட்டோ.. குவியும் கமெண்டுகள்

இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த 2018ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். அதில் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே பதிவிட்டுள்ளார். அதன்பின் அந்த அக்கவுண்ட் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை. ரஜினியின் அந்த அதிகாரப்பூர்வ கணக்கை மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். இந்த நிலையில் அதில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படத்திற்கு கடந்த ஒருவார காலமாக அதிகளவில் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளது. கிட்டதட்ட 2 லட்சத்திற்கு அதிகமான கமெண்டுகள் பதிவிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இன்றளவும் கமெண்டுகள் பதிவிடப்படுகிறது. இது வேண்டுமென்றே சிலரால் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் என ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.