சமீபத்தில் ஒரு நேர்காணலில் பத்தாண்டுகளை கடந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை பற்றி கேள்வி கேட்டபொழுது அந்த திரைப்படத்தின் இயக்குநரான கௌரி ஷிண்டே கூறிய பதிலை இங்கு பார்ப்போம்.




கௌரி ஷிண்டே பிரபல இந்திய இயக்குனர் ஆவார். தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் துல்கர் சல்மான் நடித்து வெளியான சுப் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கௌரிதான், இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார் கௌரி,


”ஏனென்றால் இந்த திரைப்படத்தில் சண்டை காட்சிகள் கிடையாது, கவர்ச்சியான காட்சிகள் கிடையாது. மாஸ் ஹீரோ போன்று திரையுலக பயணத்தில் இவர் நுழைய காரணமாக இருந்த திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்த திரைப்படத்தை எடுக்கும் பொழுதும் ஏராளமான தடைகள் இருந்தது” என்பதை அந்த நேர்காணலில் கூறியுள்ளார் கௌரி ஷிண்டே.


“யாரும் கிடையாது. ஒரு 40 வயது பெண்ணை சுற்றி நகரும் கதை இங்கிலீஷ் விங்கிலீஷ் இந்த படத்தை எப்படி ஓட வைக்க போகிறேன் என்றும் தெரியாமல் இருந்தேன் ,இந்த படத்தை எடுப்பதற்கு பல இன்னல்கள் வந்தன அதையெல்லாம் கடந்து இன்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது மக்கள் மத்தியில் ஒரு சிறந்த படமாக இங்கிலீஷ் விங்கிலீஷ் விளங்கியது” என்றும் தெரிவித்துள்ளார்


தற்போது அதை நினைக்கும் பொழுதும் மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்கிலீஷ் விங்கிலீஷ்  திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி தற்போது நம்மோடு இல்லை. ஆனால் அந்த படத்தின் போதும் ஒரு சிறந்த நடிகையோடு இணைந்து வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத கதாநாயகி ஸ்ரீதேவி. தற்போது அவர் நம்மோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று அந்த நேர்காணலில் கூறியுள்ளார் கௌரி ஷண்டே.






கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ் . அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் சிறப்பு தோற்றமளித்திருப்பார். அந்த திரைப்படம் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது, ஏனென்றால் ஒரு சராசரியான பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இங்கிலீஷ் விங்கிலீஷ்.


அதனால் அனைத்து சராசரி இந்திய பெண்களும், அந்தப் படத்தை ரிலேட் செய்துகொள்ள முடிந்ததால் ஒரு சிறந்த படமாக இங்கிலீஷ் விளங்கியது எனவும் தெரிவித்திருக்கிறார்.