அதிமுக உட்கட்சி விவகாரம்:


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பாராளுமன்ற தொகுதிகள் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே வந்து விடுகிறது. பல தொகுதிகள்தான் இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி வருகிறது. அதுபோலதான் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள, சோழவந்தான், உசிலம்பட்டி என இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் சேர்த்து ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டது தான் தேனி பாராளுமன்ற தொகுதியாகும்.


Theni Dmk candidate: தேனியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் தங்க தமிழ்செல்வன் - தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?




இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தும் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்த வந்தது தேனி பாராளுமன்ற தொகுதி ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டம். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான கட்சி மோதலில் பல்வேறுக் கட்ட பிரச்னையால் இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட அதிமுகவை சேர்ந்தவர்களே தயங்கியதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


DMK Manifesto: நீட், புதிய கல்விக்கொள்கை ரத்து; நாடு முழுவதும் காலை உணவுத்திட்டம்- திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ன?




தேனி வேட்பாளர் அறிவிப்பு:


இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவில் உட்கட்சி பிரச்னை மற்றும் கட்சியினர் வேறு கட்சிக்கு தாவல் என பல்வேறு நிகழ்வுகள் அதிமுகவில் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்து வந்தது, குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி சேர்வது குறித்து பல்வேறு கட்சிகள் அதிமுகவிடம் டிமாண்ட் வைத்திருந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் வந்தது. தேமுதிக உட்பட. ஒரு வழியாக அதிமுக சார்பில்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை முதற்கட்டமாக அறிவித்தது. இதில் அதிமுக சார்பாக தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தேனி கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வரும் V.T நாராயணசாமி என்பவரை அறிவித்துள்ளது கட்சி தலைமை.


யார் இந்த நாராயணசாமி


பெயர்: VT. நாராயணசாமி


தந்தை: PNV. திருவேங்கடம் .


வயது - 64.


படிப்பு: hotel management and catering technology.


மனைவி: N.ராணி.


மகன்   :  சூர்யபிரகாஷ்.


மகள்    :  N.சுகன்யா.


தொழில்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம்.


கட்சியில் :1982 முதல் அடிப்படை உறுப்பினர்.


பொறுப்பு: கடந்த 22 ஆம் ஆண்டு முதல் 2023 வரை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்.


தற்போதைய கட்சி பதவி: தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர்.


ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019 தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார்.கடந்த 2011,2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார்.