ஆட்சியை பிடிக்கப்போவது யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடும் போட்டியை இந்த சட்டமன்ற தேர்தல் உருவாக்கியுள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை ஒட்டுமொத்த தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி அமைத்து வந்த நிலையில் திடீர் திருப்பமாக தவெக தலைவர் விஜய் அதிக வாக்குகளை பெற்று ஆட்சி அமைப்பார் என்ற கருத்து கணிப்பு அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எனவே அதிமுக மற்றும் திமுகவின் வாக்குகளை தவெக பிரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்
எனவே மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் வாக்கு வித்தியாசம் 50ஆயிரம், 30ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 100 வாக்குகள், 200 வாக்குகள் என குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் திமுக 137 முதல் 5ஆயிரம் வாக்கு வித்திசாயத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வெற்றியை பெற்றது. எனவே இந்த முறை குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் போது குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள்
1.தி.நகர் -1372.தென்காசி-3703.காட்பாடி- 7464.நெய்வேலி-9775.விருத்தாச்சலம்-8626.ஜோலார்பேட்டை- 1091 7.திருப்போரூர்-19478.அந்தியூர்- 1275 9. உத்திரமேரூர்- 162210. திருமயம்-1382 11. ராசிபுரம்- 195212. திருச்செங்கோடு- 286213. தாராபுரம்- 139314. மயிலாடுதுறை-2742 15. ஊட்டி- 534816. குன்னூர்- 410517.திருப்பூர் தெற்கு-470918.அரியலூர்- 323419. பண்ருட்டி-469720. செய்யூர் - 404221.பூம்புகார்- 329922.வேளச்சேரி- 435223.ராஜபாளையம்- 389824.வாசுதேவநல்லூர்- 2367
