விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம குறித்து நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியார் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆலோசனைகளை வழங்கினார்.

Continues below advertisement

சிறப்பு தீவிர திருத்தம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ) ஆலோசனைகளை வழங்கினார்.

 

Continues below advertisement

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்  தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடர்பாக பணிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 29.10.2025 அன்று சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

 

ஆதனடிப்படையில், இன்றைய தினம் 70 செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் செஞ்சி பேரூராட்சியில் உள்ள தமிழ் திருமகள் திருமண மண்டபத்திலும், 71 - மயிலம் சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியிலும், 72 - திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் திண்டிவனத்தில் உள்ள கே.பி.எஸ் ஆண்டாள் திருமண மண்டபத்திலும், 73 வானூர் சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் ஆகாசம்பட்டு ஊராட்சியில் உள்ள அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கிலும், 76 - திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், சு.கொல்லூரில் உள்ள வள்ளியம்மை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தினை ஒரு வாக்காளருக்கு 2 படிவத்தினை வழங்கப்பட வேண்டும்.

மேலும், வாக்காளர்களை எங்கும் அலைக்கழிக்காமல் வாக்காளர்களின் இல்லத்திற்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று வாக்காளர்களின் சரியான விவரத்தினை கேட்டறிந்து படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு படிவத்தினை வாக்காளர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர் பெயர், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக சரிபார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.

மேற்கண்ட பணிகளை 04.11.2025 முதல் 04.12.2025 க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தினை வாக்காளர்களிடம் வழங்கி பூர்த்தி செய்து திரும்பபெற வேண்டும். எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பயிற்சி வகுப்பினை கலந்துகொண்டு சிறப்பான முறையில் இப்பணியை செய்து முடித்திட வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக சிறப்பு தீவர திருத்தம் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் வழங்கினார்.