தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் வென்ற தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து விஜய் முக்கிய வேண்டுகொள் ஒன்றையும் வைத்துள்ளார். 

Continues below advertisement

தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து முதல் முறையாக தேர்தலை சந்தித்து இருபெரும் திராவிட கட்சிகளை விஜய் வீழ்த்தியுள்ளது அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்ற தவெகவிற்கு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் சொன்ன வாழ்த்து:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

Continues below advertisement

நன்றி தெரிவித்த விஜய்

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து சொன்ன பிரதமருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் நன்றி, பிரதமர் அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் நலனே எங்களின் ஒரே குறிக்கோளாகும். அரசியலைக் கடந்து, மாநிலத்தின் முன்னேற்றத்திலும் தமிழக மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.