தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்காக எந்த எல்லைக்கும் நான் செல்வேன் என சேலத்தில் நடந்த பரப்புரையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

2026 தேர்தல் களம் அனல் பறக்கும் அளவுக்கு மாறியுள்ளது. முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கட்சி தலைவர் விஜய் இன்று சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். விமான நிலையம் தொடங்கி நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பேசிய விஜய், “நாங்கள் அரசியலுக்கு வந்தது எந்த கட்சியையும் அழிக்கவோ, ஒழிக்கவோ இல்லை. யார் மேலேயும் தனிப்பட்ட வன்மம், கோபம் இல்லை. மற்றவர்கள் மாதிரி வெறுப்பரசியல் செய்பவர்கள் நான் இல்லை. அரசியல் ரீதியா நம்முடைய எதிரி யாருன்னு முடிவு செய்துவிட்டு தேர்தலில் நின்று ஜெயித்து மக்களுக்கு நம்முடைய நன்றிக்கடனை செலுத்த வேண்டும் என்பதற்காக தான் வந்தோம். தங்களின் இயலாமையை மறைப்பதற்காக ஏ டீம், பி டீம், அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரத்தை செய்ய முடியும் என கேட்கிறார்கள். 

Continues below advertisement

அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர உங்களுக்கு அனுபவம் வேறு ஏதாவது உள்ளதா?. அடுத்தவங்க தொடங்கிய அரசியல் கட்சிகளை அட்ரஸாக கொண்டு அரசியல்வாதிகளா இருக்கும் நீங்கள் என்னை மாதிரி தனியாக கட்சி ஆரம்பித்து 1 சதவிகிதம் வாக்கு வாங்கி காட்டும் தைரியம் உள்ளதா? இரண்டு ஆண்டுகளில் 30 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்ற எங்களுக்கு அனுபவம் கிடையாது என எப்படி சொல்வீர்கள்?. இவர்களுடைய அனுபவம் என்னவென்றால் கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து விட்டது தான். 

மக்களின் அடிப்படை தேவைகளை தீர்ப்பது தான் நம்முடைய அடிப்படை வேலை. அதை தீர்க்கும் வகையிலான தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. ஒரு தெளிவான முடிவு வரும். என்னை நம்பும் உங்களை நாம் ஏமாற்ற மாட்டேன். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நான் தரமாட்டேன். 

ஆட்சிக்கு வந்த பிறகு அவங்க அது தரல, இவங்க இது தரலன்னு பம்மிகிட்டு இல்லாமல் உங்களுக்காக எந்த எல்லைக்கும் நான் செல்வேன். களம் கூட திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என சொல்கிறது. விஜய் திமுகவை மட்டும் தான் எதிர்க்கிறார். அதிமுகவை பற்றி பேசல, பாஜகவைப் பற்றி எதுவும் பேசவில்லை (கட்சி பெயரை குறிப்பிடாமல்) என சொல்கிறார்கள்.

இது தமிழ்நாட்டுக்கான தேர்தல். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள்?. அப்படி என்றால் இங்கு யாரை நாம் எதிர்க்க வேண்டும்?. அப்படி இருக்கும்போது பலமுறை மக்கள் டெலிட் பண்ணவங்களை எதிர்த்து நம்முடைய இலக்கை விட்டு விட்டு இருட்டுக்குள் ஏன் கல்லெறிய வேண்டும். திமுகவுக்கும்,தவெகவுக்கும் இடையே தான் போட்டி. இதற்கு நடுவில் வேறு யாரும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.