தவெக தலைவர் விஜய்  மேடையிலிருந்தே டாடா காட்டுவார். கீழே இறங்கவும் மாட்டார். அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா? என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் வைத்த நிலையில் விஜய் இன்று அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

அன்புமணி விமர்சனம்: 

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி  பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்  பெரம்பூர் தொகுதி  விஐபி தொகுதி எல்லாம் கிடையாது. சாமானிய தொகுதி.இங்கு வாழக்கூடியவர்கள் சாமானிய மக்கள், அடித்தட்டு மக்கள்.  இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் நடித்தார்கள் வருவார்கள் போவார்கள். இந்த தொகுதியில் போட்டியிடுபவர் (விஜய்) மேடையிலிருந்தே டாடா காட்டுவார். கீழே இறங்கவும் மாட்டார். அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா? என சிந்தித்துப் பாருங்கள்” என விஜயின் பெயரை குறிப்பிடாமலேயே அன்புமணி விமர்சித்தார்.

விஜய் பதிலடி: 

அன்புமணியின் விமர்சனத்திற்கு தவெக தலைவர் விஜய் இன்று மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இன்று காரைக்குடியில் விஜய் தனது பிரச்சாரத்தை மேற்க்கொண்டார், மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த விஜய் காரைக்குடி நகருக்குள் வந்தவுடன் அத்தனை கூட்டத்துக்கு நடுவே சைக்கிள் ஓட்டி அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்: 

ஆனால் காரைக்குடியில் விஜய் குறித்து நேரத்திற்குள் வரமுடியாததால் மக்களிடம் பேசாமல் அத்தொகுதியின் வேட்பாளரான பிரவுக்கு தனது கையிலிருந்த விசில் சின்னத்தை காட்டி வாக்கு கேட்டு அங்கிருந்து  கிளம்பி சென்றார். 

விஜய் இன்று காரைக்குடியில் பேசாதது ஏமாற்றமாக இருந்தாலும் நாளை கடலூரில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் பேசுவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது