தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196) என்று  தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அசையா சொத்து – 115 கோடி ரூபாய் (115,13,63,000) ஆகும்.

Continues below advertisement

அதேபோல விஜய் மனைவி சங்கீதா பெயரில் 15,51,79,421 (15 கோடி) அசையும் சொத்தும் 2.5 கோடி ரூபாய் (2,50,00,000 ) அசையா சொத்தும் உள்ளன.

மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் சொத்து

இதன்மூலம் மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் சொத்து விஜயிடம் உள்ளதாக, தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு - 213 கோடி ரூபாய்

 ஆக்ஸிஸ் வங்கி சேமிப்பு- 5.79 கோடி ரூபாய்

500 சவரன் தங்க நகைகள்

அதேபோல விஜய், சங்கீதா இருவரிடமும் மொத்தம் 500 சவரன் தங்க நகைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக விஜய் வசம் - 883 கிராம் தங்கம் (110 சவரன்) உள்ளது. அதேபோல 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் விஜயிடம் உள்ளன. மனைவி சங்கீதாவிடம் 2 கிலோ வெள்ளி உள்ளது. மேலும் 3132 கிராம் (391 சவரன்) தங்க நகைகள் சங்கீதாவிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி சங்கீதாவிடம் ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் உள்ளதாகவும் விஜய் வேட்பு மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவெக விஜய் 184 கோடி சொத்துக்கு வருமான வரி கட்டி உள்ளார். 

கையிருப்பு எவ்வளவு?

விஜயின் கையில் 2 லட்சம் ரொக்கமாகக் கையிருப்பு உள்ளது.

என்னென்ன கார் வகைகள்?

தவெக தலைவர் விஜயிடம் 4 சொகுசு கார்கள் உள்ளன. ஒரு சாதாரண காரும் ஒரு எக்ஸ்எல் வாகனமும் அவர் பெயரில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ – 2 வகை கார்கள் (BMW 530, BMW I7)

டொயோட்டா லெக்சஸ் (Toyoto Lexus 350) – 1

டொயோட்டாவெல்ஃபையர் Toyoto vellfire – 1

மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) – 1

டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL SUPER) - 1

கடன் கொடுத்த விஜய்

சுனில் ராஜ், புஸ்ஸி ஆனந்த், தந்தை மற்றும் தாய் சந்திரசேகர், சோபா சேகர், மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷா, வித்யா சாரிடபிள் ட்ரஸ்ட் உள்ளிட்ட பலருக்கு விஜய் கடன் கொடுத்துள்ளார்.  

அதேபோல தன் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுத் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.