அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த திருப்பதி, திருப்பத்தூர் வேட்பாளராக அறிவிப்பு. அவரின் பின்னணி என்ன?

Continues below advertisement

சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த திருப்பதியை திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். 

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கூட்டணிக்கு கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கிய நிலையில், 20 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

Continues below advertisement

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சி தரப்பில் மிக தீவிரமாக கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில்  20 வருட காலமாக அதிமுக கட்சியில் இருந்து வந்த திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ‌ திருப்பதி என்பவருக்கு சீட்டு ஒதுக்கப்படுவதாக உத்தேச பட்டியலில் பெயர் இடம் பெற்றது. தனக்கு தான் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சீட்டு ஒதுக்கப்படும் என கட்சி அலுவலகம் பிரச்சார வாகனம் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிமுக தலைமை கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக ஞானசேகர் என்பவருக்கு குக்கர் சின்னத்தில் சீட்டு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த திருப்பதி ஏரிக்கொடி பகுதியில் உள்ள தன்னுடைய மாட்டு தீவன ஆலையில் திருப்பத்தூர் தெற்கு மற்றும் வடக்கு கந்திலி தெற்கு மற்றும் வடக்கு மேலும் திருப்பத்தூர் நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, திருப்பத்தூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக திருப்பதி அறிவிக்கப்பட்டார். அவரை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

யார் இந்த திருப்பதி? அவரின் பின்னணி என்ன?

1. பெயர்: டாக்டர் N. திருப்பதி, B.V.Sc., ஒன்றிய கழக செயலாளர், திருப்பத்தூர் தெற்கு

2. பிறந்த தேதி - 23.08.1962

3. கல்வி தகுதி: B.V.Sc., (கால்நடை மருத்துவர்)

4. மனைவி பெயர் : திருமதி.கௌரி திருப்பதி B.V.SC., கால்நடை மருத்துவர்.

5. பிள்ளைகள் விவரம் :-

I. T.G.சுவாதிகா M.B.B.S., திருமணம் ஆனவர்II. T.G.கிருத்திகா M.B.B.S., திருமணம் ஆனவர்III. T.G. B.E., MBA., BuildersIV. T.G. B.V.Sc., (3 Year)

6. 1990 முதல் 2011 வரையில் அரசு கால் நடை மருத்துவராக கால் நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

7. 2011 முதல் 2016 வரை திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர்.

8. 2019 முதல் நாளது வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வருகிறேன்.

7. 2011 முதல் 2025 வரை கழக பேராட்டங்களில் கலந்துக் கொண்டு மூன்று முறை சிறை சென்றுள்ளார்.

திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே. சி.வீரமணியால் ஓரம் கட்டப்பட்ட ஒன்றிய செயலாளர்கள்!. அதிருப்தியில் அதிமுகவினர்.

முன்னாள் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரமாக பணியாற்றி வருபவர் கே. சி.வீரமணி என்பவர் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருத்துவர் திருப்பதிக்கு சீட்டு வாங்கி தருவதாக ஆசை காட்டி மோசம் செய்துள்ளாராம்.

இதனால் திருப்பத்தூரில் திருப்பதியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளருக்கு எம்எல்ஏ சீட் வழங்காததால் கூட்டணிக்கு சீட்டு ஒதுக்கியதால் அப்செட்டில் இருந்த மருத்துவர்  திருப்பதி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து திருப்பத்தூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். 

ஏற்கனவே கந்திலி ஒன்றிய செயலாளராக இருந்த மணிகண்டனையும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதியையும் ஓரம் கட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி. இதனால் கந்திலி, திருப்பத்தூர், உள்ளிட்ட ஒன்றியங்களில்அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.