தவெக தலைவர் பெரம்பூரில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்காaன பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியும் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலானது. கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என பம்பரமாக சுழன்று வருகின்றன. திமுக, அதிமுக கட்சிகளின் தலைவர்களான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கட்சி மாநாடு, இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தொடர்ந்து மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கி இருக்கும் விஜய், எப்போது பிரச்சாரத்தை தொடங்குவார் என்று அவரது தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தின்  படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் நேரடியாக மக்களை சந்திப்பார் என்றும் சொல்லப்பட்டது. மாவட்ட வாரியாக பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு, சில நாட்கள் பிரச்சாரத்தை நிறுத்தி வைத்தார். அதன்பிறகு, புதுச்சேரி, ஈரோடு, தஞ்சாவூர் என அங்கு கட்சி கூட்டம் நடத்தினார். ஆனால், விஜய் இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். தேர்தல் தேதி அறிவித்த பிறகும் அவர் இன்னும் பிரச்சாரத்தை தொடங்வில்லை. கூட்டணிக்குள் யாரும் வரவில்லை, வேட்பாளர்கள் தேர்வு எந்தளவில் இருக்கிறது என்று கேள்வி எழத்தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் எங்கிருந்து தொடங்குவார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Continues below advertisement

2000 நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டம்

மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை சுமார் 2000 பேரை சந்திக்கவும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்கவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரம்பூரில் இருந்து விஜய் பிரச்சாரம்

பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலுக்காக விஜய் சுமார் 25 நாட்கள் பிரச்சார பயணத்திட்டத்தை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை விஜய் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.