TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளுக்கு, அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்- தவெக விஜய் தேர்தல் வாக்குறுதி

ஏப்ரல் 16ஆம் தேதி தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் புத்தகமாக வெளியிடப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
- நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய, அரசுக்கு சொந்தமாக உலகளாவிய இ காமர்ஸ் சந்தை உருவாக்கப்படும்.
- கைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரம், விசைத்தறிகளுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரம் உயர்த்தி அளிக்கப்படும்.
- நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு அளிக்கப்படும்.
- கைத்தறி, விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய், தவெக அரசால் வழங்கப்படும்.
- தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில் வெற்றி தறி விற்பனை நிலையங்கள் (ஷோரூம்கள்) அமைக்கப்படும்.
-
நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ரூ.15 ஆயிரம் ஃபண்ட் உருவாக்கப்படும்.
-
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட முக்கியக் காரணமான பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை தவெக அரசு நிறுத்தி வைக்கும்.
- நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயம் உள்ளிட்டவற்றுக்கு 50% மானியம்.
விவசாயிகள், சிறு, குறு தொழில்கள் செய்வோருக்கும் தவெக தலைவர் விஜய், வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அதில்,
- 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளுக்கு, அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- 5 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
- குறைந்தபட்ச ஆதார விலைக்கு, உத்தரவாத சட்டம் கொண்டு வரப்படும்.
- காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை உறுதி செய்யப்படும்.
- காவல்துறையின் அடிப்படை ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தப்பட்டு, பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டு வருகிறார்.
மேலும் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழ்நாடு இரண்டாமிடம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதுதான் திமுக அரசின் சாதனை எனவும் விஜய் சாடியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















