நெருங்கும் தேர்தல்- கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 35 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இறுதி கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்தும் வகையில் அதிமுக சார்பாகவும் கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாக நடிகர் விஜய்யின் தவெகவையும் தங்கள் அணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதில் தவெகவிற்கு 50 தொகுதிகளும், துணை முதலமைச்சர் பதவியும் வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அதிமுக இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தகவல் வெளியானது.

Continues below advertisement

அதிமுகவுடன் கூட்டணியா.?

இந்த நிலையில் தவெக கூட்டணி தொடர்பாக வெளியாகி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளு வைக்கும் வகையில்  தவெக இணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் வெளியிட்டுள்ள பதிவில், வதந்திகளை நம்ப வேண்டாம்! சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

எந்தவித பேச்சுவார்த்தை நடத்தவில்லை

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல்  தலைவர்களுடன் எந்தவிதமான  பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு  தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

Continues below advertisement

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! என CTR. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.