மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.பாஜக வேட்பாளார் சுவேந்தி அதிகாரியை விட 1200 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 



மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 212 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 78 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி நடைபோடுகிறது.


இதையடுத்து,  உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல் அகிலேஷ் யாதவ், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்து கூறினார்.


நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி 5000 வாக்குகள் பின் தங்கியிருந்த நிலையில், மீண்டும் சுமார் 1500 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். பாஜக வேட்பாளர் சுவேந்து ஆதிகாரி 16 வது சுற்று எண்ணிக்கைக்கு பின்னர் 6 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.


இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.பாஜக வேட்பாளார் சுவேந்தி அதிகாரியை விட 1200 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். வெற்றிக்குப்பின் பேசிய மம்தா பானர்ஜி, “கொரோனா தொற்றுள்ள நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள். வெற்றி கொண்டாட்டங்கள் வேண்டாம்’ என்று கூறினார்.


முன்னதாக, அசன்சோல் பகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோல், காளிகட் பகுதியிலும் வெற்றியை கொண்டாடினர்.



சுவேந்து அதிகாரி:




நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி முதலில் பிந்தங்கியே இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி முன்னிலை பெற்று வந்தார். அதன்பிறகு நிலைமை மாறி 1200 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தினார். முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் அமைச்சர் இருந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்தார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியதற்கு காரணம்.  அந்தத் தொகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. நந்திகிராமில் கடந்த 2007ஆம் ஆண்டில் ரசாயன ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர் சுவேந்து அதிகாரி. இதனால், மம்தாவுக்கு அவர் சவாலாக இருப்பார் என்று கணக்கு போட்ட பாஜக அவரை  அங்கு நிறுத்தியது. அதற்கு ஏற்றார்போலவே அவரும் கடைசி வரைக்கும் மம்தாவுக்கு கடும் சவாலாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பரப்புரையில் காலில் காயம், வீல் சேரில் ஆவேச பேச்சு




நந்திகிராமில் பரப்புரையின்போது மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டது. தன்னை கீழே தள்ளி சதி செய்து காயம் ஏற்படுத்திவிட்டதாக மம்தா கூறினார். ஆனால், சிறு விபத்தை பெரியசம்பவம் போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா வாக்குகளை பெற பார்ப்பதாகவும், மம்தாவும், பிரஷாந்த் கிஷோரும் செய்த திட்டமிட்ட நாடகம் இது என்றும் பாஜக குற்றம்சாட்டியது. அதன்பிறகு, வீல் சேரில் அமர்ந்தபடி பரப்புரை செய்த மம்தா பானர்ஜி, “அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது . வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன். ஆனால், ஒருபோதும் தலை வணங்கவில்லை” என்று ஆவேசமாக பேசினார்.


சொன்னதை செய்து காட்டிய பிரசாந்த் கிஷோர்




மோடி பெயருக்காகவும், இந்து என்பதற்காகவும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிப்பதாகவும், மேற்கு வங்கத்தில் 27 சதவீத தலித் மக்கள் மற்றும் 1 கோடி இந்தி பேசும் மக்கள் அனைவருக்கும் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக பிரசாந்த் கிஷோர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாஜக, பிரச்சாரத்தில் இதை பேசுபொருளாக மாற்றியது. தான் பேசிய முழு ஆடியோவையும் வெளியிடாமல், ஒருசில வார்த்தைகளை மட்டும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துவருவதாகவும், தான் முன்பு கூறியதுபோல் பாஜக 100 தொகுதிகளுக்கு மேல், மேற்கு வங்கத்தில் வெல்ல முடியாது. அப்படி வென்றுவிட்டால், டிவிட்டரை விட்டு வெளியேறிவிடுவேன் என்றும் கூறினார். 


இந்நிலையில், பிரஷாந்த் கிஷோர் கூறியபடி, மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் 78 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் திரிணாமுல், தமிழ்நாட்டில் திமுக வென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுவதாகவும் பிரஷாந்த் கூறினார். தான் கூறியபடியே பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை என்று அவர் கூறினார்.


மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி அடைந்தாலும், அக்கட்சியின் தலைவர் நந்திகிராமில் தோல்வியுற்றது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி, “நந்திகிராம் பற்றி கவலைப்பட வேண்டாம்.நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் கொடுக்கட்டும், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.நாங்கள் 221 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றோம். பாஜக தேர்தலில் தோல்வியடைந்துள்ளது” என்று கூறினார்.