TN Election Campaign 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் இன்று எங்கெங்கு பேசுகின்றனர் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை - இன்றே கடைசி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ளது, தேர்வுக்கு முந்தைய நாளில் மிகத்தீவிரமாக படிக்கும் மாணவரை போன்று, வேட்பாளர்கள் இன்று பெரும்பாலான மக்களை சந்தித்து தங்களுக்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், பிரதான அரசியல் கட்சி தலைவர்களும் இன்று பல்வேறு பகுதிகளில் பரப்புரை, பொதுக்கூட்டம் மற்றும் ரோட் ஷோ ஆகியவற்றிற்கு திட்டமிட்டுள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது. திரைப்படம், டி.வி., ரேடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் தேர்தல் பரப்புரை கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் எந்தெந்த அரசியல் கட்சியினர், தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கின்றனர் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இன்று எந்த தலைவர் எங்கு பரப்புரை:
- மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலம் முழுவதுமான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனக்காக வாக்கு சேகரிக்க உள்ளார். முன்னதாக வில்லிவாக்கத்திலும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட உள்ளார்
- தவெக தலைவர் விஜய் இன்று மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
- தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது
- ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு:- சென்னை நட்சத்திர ஓட்டலில் பேட்டி.
- அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - சென்னை நட்சத்திர ஓட்டலில் பேட்டி
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: பாபநாசம், தஞ்சை
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: மதுரை தெற்கு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்: திருவொற்றியூர்.
- இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்: சென்னை
- பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்: தர்மபுரி
- பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்:-மதுரை தெற்கு, ராமநாதபுரம்
தேர்தல் பரப்புரை முடிந்தவுடனே மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
