“நானும் ஒரு விவசாயி மகன்தான்” மார்க்கெட்டில் காய்கறி விற்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் டாக்டர் திருப்பதி.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் டாக்டர் திருப்பதி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
2026 சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக டாக்டர் திருப்பதி போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேட்பாளர் திருப்பதி இன்று திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் மார்க்கெட்டில் உள்ள கடையில் காய்கறி விற்பனை செய்தும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடியும் ஆதரவு கோரினார்.
இந்த வித்தியாசமான வாக்கு சேகரிப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் டாக்டர் திருப்பதி, “நானும் ஒரு விவசாயி மகன் தான். எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை இம்மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தேன். அதனால் உங்களின் கஷ்டங்களை நன்றாக புரிந்து கொண்டுள்ளேன். எனவே தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.
மேலும், நான் வெற்றி பெற்றால் திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன், என்றும் உறுதியளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்


















