கடலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காளியம்மாள் அதிமுகவில் இணைந்ததற்கான காரணத்தை தெரிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

Continues below advertisement

கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத்தை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், தண்ணி என்றால் எனக்கு பயம் என்று சொல்லும் ஒருவரை மீன்வளத்துறை அமைச்சர் ஆக்கி மீனவ சமுதாயத்திற்கு அநீதியை இழத்ததாகவும், நமக்கான ஒரே அங்கீகாரம் கிடைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் உறுதி அளித்ததை அடுத்துதான் நான் அதிமுகவில் இணைந்து இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். 

Continues below advertisement

அரசியலுக்கு புதிதாக வந்திருப்பவர்கள் என விஜய் மறைமுகமாக விமர்சித்த காளியம்மாள், சீமான் ஸ்டைலில் வாய்ப்பில்லை ராஜா என்று கூறிமக்கள் பிரச்சினையை 10 நிமிடம் பேச சொல்லுங்கள் அதன் பிறகு அவருக்கு வாக்களிக்கலாம் என்று கூறினார். 

அதிமுக சார்பில் கடலூர் துறைமுக பகுதியில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி துறைமுக பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கடலூர் உழவர் சந்தை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுகவின் கடந்த பத்தாண்டு கால சாதனைகள் குறித்தும், 2026 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ போட்டு கொடுத்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.