மேலும் அறிய

TVK Vijay: கழகங்களின் கல்லா பெட்டியை கரைக்கும் விஜய்.. களத்தில் தவிக்கும் தவெக பாய்ஸ் - இம்பேக்ட் எப்படி?

TVK Vijay: தவெக தலைவர் விஜயின் வருகை திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தேர்தல் செலவுகளை ஏகபோகமாக உயர்த்தச் செய்துள்ளதாம்.

TVK Vijay: சட்டமன்ற தேர்தலில் விஜயின் தாக்கம் இருந்தாலும், களத்தில் இறங்கி பணி செய்ய ஆட்கள் இல்லாததால் தவெக தரப்பு சுணங்கிக் கிடக்கிறதாம்.

அரசியல் களத்தில் விஜயின் இம்பேக்ட்

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி விஜய், முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டுள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோமென அவர் பரப்புரைகளில் பேசி வருகிறார். வாக்குரிமையே இல்லாத சிறுசுகள் எல்லாம், தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வற்புறுத்த தொடங்கி இருப்பது விஜய்க்கான மிக்கபெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விஜய் இருப்பாரே தவிர, மிகப்பெரிய அளவில் தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பில்லை என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரம், விஜயின் தாக்கத்தால் பல தொகுதிகளை இழந்துவிடுவோமோ என திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே, பணத்தை வாரி செலவிட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கரன்சியை இறக்கும் கழகங்கள்..

கடலூர், கும்மிடிப்பூண்டி என பல இடங்களில் கடைசி நேரத்தில் விஜய் தனது பரப்புரையை ரத்து செய்வது,கட்சி நிர்வாகிகளுக்கு மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்துகிறது. அதேநேரம், விஜயின் வருகையால் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவும் மானாவரியாக செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. தவெகவின் தாக்கத்தை சமாளிக்க பாக முகவர்கள் மற்றும்  வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் பணம் செலழிக்கப்படுகிறதாம். வாக்குகள் பிரிவதை தடுக்க அதற்கான பணத்தை கடைசி நேரத்தில் சகட்டுமேனிக்கு இறக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தயாரகை வருகின்றனவாம்.  சென்னையிலேயே ஆர்.கே. நகர், அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் விஜய் பிரிக்கும் வாக்குகளே வெற்றி தோல்வியை பிரிக்க உள்ளதாக திமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கட்டுப்பாடின்றி தேவையான ஸ்வீட் பாக்ஸ்களை களமிறக்க உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் கணக்கு போட்டு வருகின்றனவாம்.


TVK Vijay: கழகங்களின் கல்லா பெட்டியை கரைக்கும் விஜய்.. களத்தில் தவிக்கும் தவெக பாய்ஸ் - இம்பேக்ட் எப்படி?

வேகம் காட்டும் திமுக..

பணத்தை என்ன தான் வரம்பின்றி செலவு செய்தாலும் விஜய்க்கு செல்லும் வாக்குகளை முழுமையாக தடுக்க முடியாது என்பதையும் திமுக தலைமையும் உணர்ந்துள்ளதாம். குறைந்தபட்சம் அதை கணிசமாக குறைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, கட்சிக்கு வார்ட் வாரியாக இருக்கும் வாக்குகளை சிதறாமல் அறுவடை செய்ய வேண்டும் என கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு ஸ்டாலினே நேரடியாக அறிவுறுத்தி வருகிறார். பெண் வாக்காளர்களை கவர்வதற்கான பணிகளையும் களத்தில் முடுக்கிவிட்டுள்ளனராம்.

அதிமுகவின் வியூகம் என்ன

தவெகவிற்கு பெரிய கட்டமைப்பு இல்லாவிட்டாலும், விஜயை லேசாக டீல் செய்ய முடியாது என அதிமுக கருதுகிறதாம். இதனால் தான் கட்சி நிர்வாகிகளை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க எடப்பாடி அறிவுறுத்தியுள்ளாராம். விஜயின் இளைஞர் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப, ஏம்பா கொரோனா காலத்தில் ஆல்-பாஸ் போட்டுவிட்ட எங்களை மறந்துவிடாதீர்கள் என அவரே பரப்புரையில் பேசி வருகிறார். அஜித் ரசிகர்களை கவரும் விதமாக அவருடன் எடப்பாடி இருக்கும் படத்தையும் அதிமுக பரப்புரையின் போது அவ்வப்போது காட்டப்படுகிறது. தேவையான இடங்களில் பணத்தையும் தாராளமாக செலவழிக்கவும் அதிமுக முடிவு செய்துள்ளதாம்.


TVK Vijay: கழகங்களின் கல்லா பெட்டியை கரைக்கும் விஜய்.. களத்தில் தவிக்கும் தவெக பாய்ஸ் - இம்பேக்ட் எப்படி?

தவிக்கும் தவெக பாய்ஸ்

தவெக வேட்பாளர்களின் பெயர்களை கூட பல தொகுதிகளில் மக்கள் அறியாவிட்டாலும், எங்கள் தலைவனின் முகம் தான் எங்களின் ப்ராண்ட் என தவெகவினர் களமாடி வருகின்றனர். ஆனால், பல இடங்களில் விஜய் கடைசி நேரத்தில் பரப்புரையை ரத்து செய்வது நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரை மட்டுமே நம்பியிருக்கும் வேட்பாளர்களுக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.

இதுதொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் பேசுகையில், “த.வெ.க-வின் கட்டமைப்பில், பட்டியல் சமூகத்தினர்தான் அதிகமான கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். கடலூரில் அவர் பிரசாரத்துக்குச் சென்றிருந்தால், வடமாவட்டங்களில் இருக்கும் பட்டியல் சமூக வாக்குகள் தவெகவுக்கு ஆதரவாக அணி திரண்டிருக்கும். புதுக்கோட்டையிலும் அறந்தாங்கியிலும் பிரசாரத்துக்குச் சென்றிருந்தால், அரசியல் அங்கீகாரம் தேடும் இஸ்லாமியர்களும் முத்தரையர்களும் தவெக பக்கம் திரும்பியிருக்கும். இந்த வாய்ப்புகளை எல்லாம் விஜய் தவறவிட்டு விட்டார்” என வேதனை தெரிவிக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !
விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
‘காத்திருப்போர் பட்டியலில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்’ பின்னணி என்ன?
Thiruma: ‘’நூறாண்டானாலும் தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியாது’’ திருமா வேதனை
Thiruma: ‘’நூறாண்டானாலும் தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியாது’’ திருமா வேதனை
TTV Dhinakaran: தவெகவிற்கு டிடிவி தினகரன் மறைமுக ஆதரவா.? காமராஜை நீக்கியது நாடகமா.? ஓ.. இப்படி ஒரு ஐடியாவா.?
தவெகவிற்கு டிடிவி தினகரன் மறைமுக ஆதரவா.? காமராஜை நீக்கியது நாடகமா.? ஓ.. இப்படி ஒரு ஐடியாவா.?
’’கட்சிக்காரங்க யாரும் பேனர் வைக்கக்கூடாது.. மீறினா’’ தவெக கடும் எச்சரிக்கை!
’’கட்சிக்காரங்க யாரும் பேனர் வைக்கக்கூடாது.. மீறினா’’ தவெக கடும் எச்சரிக்கை!
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
Maruti Suzuki eVITARA: காத்திருப்பு முடிந்தது.! டீலர்ஷிப்புகளுக்கு வந்த மாருதி இ-விதாரா; இவ்வளவு சிறப்பம்சங்களா.! விலை என்ன.?
காத்திருப்பு முடிந்தது.! டீலர்ஷிப்புகளுக்கு வந்த மாருதி இ-விதாரா; இவ்வளவு சிறப்பம்சங்களா.! விலை என்ன.?
Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
Embed widget