மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதாவது ஏப்ரல் 3ஆம் தேதி திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்படும்போது, பாதிப்புகளைப் பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா மட்டும் வந்தார், ஆனால் நிதி வரவில்லை. நாங்கள் மத்திய பேரிடர் நிதியைக் கேட்கின்றோம். ஆனால் அவர்கள் மாநில பேரிடர் நிதியைத் தான் தந்தார்கள் என பேசி வருகின்றார். 


அதில், தமிழ்நாடு மட்டும் இன்றி, தன்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரின் முதுகிலும் குத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுக்கு ஆதாயம் தேடித் தரவே எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் எடப்பாடி மோடிக்கு ஆதரவு தெரிவிப்பார். 


இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை. திமுக முதன்முதலில் வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் திருவண்ணாமலையும் ஒன்று. முதலமைச்சரான பின்னர் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் கலந்துகொண்டேன். பக்தர்கள் போற்றும் ஆட்சியை திமுக அரசு வழங்குகின்றது. அட்பர்கள் கதறும் ஆட்சியாக திமுக அரசின் ஆட்சி அமைந்துள்ளது. 


மத்தியில் பாஜக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும். இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுக்காக்கும். தோல்வி பயத்தில் பொய்யும் புரளியும் பேசுகின்றார் நரேந்திர மோடி.