நகர் புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ந் தேதி நடைபெறுகின்றது.இதனை முன்னிட்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பிரச்சாரம் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏவும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தற்போது ஆரோக்கியமான சூழ்நிலை  அதிமுக உருவாகியிருக்கிறது. நடந்த முடிந்த எம்எல்ஏ தேர்தலில் சிறு இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற திமுக கடந்த 9 மாதங்களாக எதுவுமே செய்ய முடியாத, மக்கள் விரோத ஆட்சியாக, சொந்த வாக்குகளை காப்பாற்ற முடியாத ஆட்சியாக, கடுமையான அதிர்ப்தியை தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து தரப்பு மக்களிடமிருந்து, அவர்கள் விளக்கி வருகின்றார்கள். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிய வில்லை.  




எம்ஜிஆர், தொடங்கிய இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி, மூன்று முறை முதல்வராக யாராலும்  வெல்ல முடியாத முதல்வராக,  நல்ல பல திட்டங்களை,நாட்டு அர்ப்பணிக்கின்ற முதல்வராக, 10 ஆண்டு காலம் சிறப்பான  எம்ஜிஆரிக்கு பின்னால் 16 ஆண்டுகள், தமிழகத்தின் முதல்வராக,  தொலை நோக்கு திட்டங்களை  அறிவித்தார். 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் வாரிசுகளுக்காக இந்திட்டங்களை அறிவித்தார். ஜெயலிதாவிற்கு பிறகு நான்கு ஆண்டு காலம், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை    அடிபிறழாமல் அப்படியே மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். அதிமுக 30 ஆண்டு காலம் தமிழகத்தினுடைய முதல்வர். தமிழக்தினுடைய அரசியல் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னால் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது என்று பெயர் அதிமுகவிற்கு உண்டு.




இந்த வரலாற்றை படைத்தற்க காரணம் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது, 18 லட்சம் பேர் உறுப்பினர்கள் இருந்தனர். பொது செயலாளராக ஜெயலலிதா ஆன போது,  எத்தனை சோதனைகள் வேதனைகள், நெருக்கடிகள், எப்படியாவது அதிமுகவை நசுக்கி ஒடுக்கி, கங்கணம் கட்டி கொண்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, இவர் செய்த சதிகளை எல்லாம் ஜெயலலிதா முறியடித்து, அதிமுக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக ஆக்கினார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை.




மக்களுக்கு என்ன தேவை என்ன திட்டம் என்று ஜெயலலிதா எண்ணிய காரணத்தினால், ரூ.2.10 கோடி கார்டுகளுக்கு அரிசி, ஐந்தரை லட்சம் காங்கீரிட் வீடுகள், ஜெயலலிதா தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள்  நுாற்றுக்கு நுாறு நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். மேலும் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானவுடன், பெண்கள் திருமண உதவித்திட்டம், ரூ. 50 ஆயிரமாகவும்,  8 கிராம் தாலிக்கு தங்கம், பேறு கால உதவியாக ரூ. 18 ஆயிரமாகவும் வழங்கினார்.சொன்ன வார்த்தைகளை அறிக்கையினை நிறைவேற்றினால் தானே சாதனை. மாணவர்களுக்கு கல்வி திட்டம், 16 வகையான உபகரணங்கள், இலவச கல்வி, வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட மாணவர்களுக்காக தமிழகத்தின் ஆண்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக ரூ. 33,000 கோடி ஒதுக்கினார்.


தமிழகத்தின் 52 சதவீதம் படித்த பட்டதாரி மாணவர்கள் உள்ளதற்கு அதிமுக ஆட்சி தான்.  உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்லாயிரக்கணக்கான கோடியில் தொழில்களை கொண்டு, வேலை வாய்ப்பை உருவாக்கினார். மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதி பூங்காவும், மதச்சண்டை, ஜாதி சண்டை இல்லாத இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்தது. இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட உடனடி நிவாரணம் வழங்கினார். கொரோனா தொற்றால் மக்களை பாதுகாக்க உடனடியாக மருத்துவ வசதிகள், பொது மக்கள் பாதுகாப்பு, உணவுகளை வழங்க உத்தரவிட்டார்.  இதனால் கொரோனா தடுப்பு எடுக்கப்பட்ட காரணத்திற்காக, தொற்று கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது. 




இப்போது கொரோனா தொற்று வந்து விட்டது. திமுக அரசு ஏதாவது செய்ததா எதுவும் செய்யவில்லை,  யாருக்கு வந்தால் என்ன,யாருக்க போனால் என்ன, யார் இறந்தால் என்ன, யார் செத்தால் என்ன,. அதிமுகவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தனர். ஜீவாதாரம் உரிமைகளை பாதுகாப்பதில் ஜெயலலிதா தான். காவிரி மன்ற தீ்ர்ப்பு வந்த போது, கருணாநிதி ஆட்சி, மத்தியிலுள்ள காங்கிரஸ் கட்சியில் கூட்டணியிலுள்ளதால் கருணாநிதி செய்ய வில்லை.  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றால், மத்திய அரசின் அரசிதழிலில் வெளியிட வேண்டும்.  காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழிலில் வெளியிட்டார். தஞ்சை தரணி நாங்கள் தான் என்று சொல்லிக்கொண்டு, ஆட்சியில் பொறுப்பில் இருந்தும் செய்ய முடியாத காரியத்தை ஜெயலலிதா செய்து முடித்தார். காவிரி நதி நீர் ஆணையத்தை அமைத்து கொடுத்ததும் அதிமுக தான்.


திமுக கடந்த எம்எல்ஏ தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள், முதல்வரானதும் நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள்.  ஆனால் மாதங்கள் ஆகியும் ரத்து செய்ய முடியவில்லை. இதனால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தோம். வங்கி கடனை வரவில்லை கல்வி கடன்களை ரத்து செய்யப்படவில்லை.  விவசாய கடனை ரத்து செய்யவில்லை. திமுகவால் செய்ய முடியாது. பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, வாக்காளர்களை சொல்லி மக்களை நம்ப வைத்து ஆளுகின்ற பொறுப்பில் இருக்கின்றார்கள். நேரிடையாக மக்களை சந்திக்கின்ற அச்சம் திமகவிற்கு ஏற்பட்டிருக்கின்றது.


போகும் இடங்களிலில் எல்லாம் பெண்கள் கேள்வி கேட்கின்றார்கள். முக.ஸ்டாலின் நேரிடையாக மக்களை சந்திக்காமல் கானொளியில் பேசுகின்றார். உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ரூ.1000 தருகின்றேன் என்று சொன்னீர்களே, வரவில்லையே என்றார். தருவோம், தருவோம் என்ற நான்கு வருடம் இருக்கின்றது என்று பதில் கூறுகிறார். வரும் நான்கு வருடமும் நாமம் போட்டு போகனும். உதயநிதி ஸ்டாலினிடம் யார் கேட்டாலும் நாலு வருடம் என்று சொல்லி வருகின்றார்.  ஆனால் நான்கு ஆண்டுகள் முடிவதற்கு முன்னால் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வருகின்றது. மக்கள் விரோத ஆட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி, இரண்டு ஆண்டில் வரும் எம்பி தேர்தலோடு, எம்எல்ஏ தேர்தலும் உறுதியாக வரும்.  அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவார்கள். பொங்கல் பண்டிகையில் அதிமுகவில் தரமான பொருட்களை வழங்கினோம். ஆனால் திமுக வழங்கிய பொருட்களால் சந்தி சிரிக்கின்றது. தரமற்ற அரிசி, பப்பாளி விதை, உருகியவெல்லம் உள்ளிட்ட பயன்படுத்த முடியாத பொருட்களை வழங்கினார்கள். மேலும் பொங்கல் பண்டிகையின் போது, பொது மக்களுக்கு ஒரு நயா பைசா கூட கொடுக்க வில்லை. மக்கள் கேட்டதை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் திமுக உள்ளது. நிர்வாக திறன் இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.




பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் மட்டும் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கின்றார். இது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் வழங்கிய அனைத்து பொருட்களும் தரமற்ற பொருட்கள் தான் என்று சொல்லி விட்டது. ராஜினாமா செய்து விட்டு போக தயாராக நீங்கள், மக்களின் வரிப்பணம், வரிப்பணம் வீணாகி போகின்றது. ஊழல் செய்வதற்காக வெளிமாநிலத்திலிருந்து தரமற்ற பொருட்களை வாங்கியுள்ளார்கள். இதுதான் இந்த ஆட்சியினுடைய அவலட்சணமாக உள்ளது. எந்த ஒரு திட்டமும் இல்லை. நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல், தொண்டர்களுக்கான தேர்தல், 50 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்தது ஜெயலலிதா தான்.  அனைவரும் ஒரணியில் நின்று வெற்றி பெறவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்டி சோமசுந்தரம் மகன் எஸ்டிஎஸ் செல்வம் தலைமையில் ஏராளமானோர், ஒபன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.