தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜே. கருணாநிதி வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
TN Election: 137 மட்டுமே..! 1000 டூ 5000 வாக்குகள் - கட்சிகளை கலங்கடித்த 39 தொகுதிகள் - நொந்துபோன வேட்பாளர்கள் - 2021 தேர்தல்
Tamilnadu Assembly Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Tamilnadu Assembly Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், வெறும் 137 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - கூட்டணி ஏன் அவசியம்?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் பணிகளை திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் எப்படி இருந்தது? ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலசி வருகிறோம். அந்த வகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இந்த தரவுகளானது, வெற்றிக்கு சிறிய கட்சிகள் உடனான கூட்டணி கூட என் அவசியம் என்பதை உணர்த்துகின்றன.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் - 137 வாக்குகள் மட்டுமே
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐ. பெரியசாமி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 517 வாக்குகளை பெற்று மாநிலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். அதற்கு நேர் எதிராக சென்னை தியாகராய நகரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜே. கருணாநிதி வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதன் மூலம், கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றார். ஒட்டுமொத்தமாக 8 வேட்பாளர்கள் வெறும் ஆயிரத்திகும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினர்.
ஆட்சியை பிடுங்கிய 39 தொகுதிகள் - ஸ்டார் டூ லெஜண்ட்ஸ்
ஒட்டுமொத்தமாக 137 வாக்குகள் தொடங்கி 5000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும், 39 வேட்பாளர்கள் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்து மனமுடைந்து போயினர். இந்த தொகுதிகள் தான் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்தன என்று குறிப்பிட்டால் மிகையாகாது. மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் துரைமுருகன் போன்ற மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இருக்க, குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் ஆகியோரும் அடங்குவர்.
ஜாக்பாட் வேட்பாளர்கள் - நொந்துபோன எதிரிகள்..
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதன்மையான 10 பேரின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
| தொகுதி | வெற்றியாளர் | தோல்வியுற்றவர் | வித்தியாசம் |
| தியாகராய நகர் | ஜே. கருணாநிதி (திமுக) | சத்தியநாராயணன் (அதிமுக) | 137 |
| மொடக்குறிச்சி | சி.கே. சரஸ்வதி (பாஜக) | சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக) | 281 வாக்குகள் |
| தென்காசி | பழனி நாடார் (காங்.,) | செல்வா மோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக) | 370 வாக்குகள் |
| மேட்டூர் | சதாசிவம் (பாமக) | ஸ்ரீனிவாச பெருமாள் (திமுக) | 656 வாக்குகள் |
| காட்பாடி | துரைமுருகன் (திமுக) | ராமு (அதிமுக) | 746 வாக்குகள் |
| கிருஷ்ணகிரி | அசோக் குமார் (அதிமுக) | செங்குட்டுவன் (திமுக) | 794 வாக்குகள் |
| விருதாச்சலம் | ராதாகிருஷ்னன் (காங்.,) | கார்த்திகேயன் (பாமக) | 862 வாக்குகள் |
| நெய்வேலி | சபா ராஜேந்திரன் (திமுக) | ஜெகன் (பாமக) | 977 வாக்குகள் |
| ஜோலார்பேட் | தேவராஜி (திமுக) | கே.சி. வீரமணி (அதிமுக) | 1091 வாக்குகள் |
| கிணத்துக்கடவு | தாமோதரன் (அதிமுக) | குறிஞ்சி பிரபாகரன் (திமுக) | 1095 வாக்குகள் |
1000 டூ 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்
- அந்தியூர் - வெங்கடாச்சலம் (திமுக) - 1275 வாக்குகள் வித்தியாசம்
- திருமயம் - ரகுபதி (திமுக) - 1382 வாக்குகள் வித்தியாசம்
- தாராபுரம் - கயல்விழி (திமுக) - 1393 வாக்குகள் வித்தியாசம்
- உத்திரமேரூர் - சுந்தர் (திமுக) - 1622 வாக்குகள் வித்தியாசம்
- பொள்ளாச்சி - ஜெயராமன் (அதிமுக) - 1622 வாக்குகள் வித்தியாசம்
- கோவை தெற்கு - வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக) - 1728 வாக்குகள் வித்தியாசம்
- கூடலூர் - பொன் ஜெயசீலன் (அதிமுக) - 1945 வாக்குகள் வித்தியாசம்
- திருப்போரூர் - எஸ். எஸ். பாலாஜி (விசிக) - 1947 வாக்குகள் வித்தியாசம்
- ராசிபுரம் - மதிவேந்தன் (திமுக) - 1952 வாக்குகள் வித்தியாசம்
- மயிலம் - சிவகுமார் (பாமக) - 2230 வாக்குகள் வித்தியாசம்
வெற்றி விகித்சாரா கணக்குகள்:
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் 16. சதவிகிதம் அதாவது 39 தொகுதிகளில் வெற்றி தோல்விகள் ஆனது, வெறும் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது 2021ம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகளில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஆகும். திமுக கூட்டணி ஆனது 22 இடங்களில் வெறும் 5 ஆயிரத்திகும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், இந்த வாக்கு வித்தியாசத்திலேயே 17 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இந்த குறுகிய வெற்றிடத்தை நிரப்பவே கூட்டணி கணக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் வலுவாக உள்ள சமூக மற்றும் சமய அமைப்புகளின் ஆதரவை கட்சிகள் நாடுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் சில ஆயிரம் வாக்குகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதற்கான சாட்சியே 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகளாகும்.
Frequently Asked Questions
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் யார்?
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் 5000 வாக்குகள் வித்தியாசத்திற்குள் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது?
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில், 16% அதாவது 39 தொகுதிகளில் வெற்றி தோல்விகள் 5000 வாக்குகள் வித்தியாசத்திற்குள் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளுடனான கூட்டணி ஏன் முக்கியமானது?
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் தரவுகள், சிறிய கட்சிகளுடனான கூட்டணி கூட வெற்றிக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகின்றன.
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் எந்த தொகுதியில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்?
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன், 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.






















