Tamil Nadu Exit Poll 2026 LIVE: அதிமுக கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும்... இபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுதா?
Tamil Nadu Exit Poll 2026 Results LIVE: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டியானது நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பற்றி இங்கு காணலாம்.
பேச்சி ஆவுடையப்பன்Last Updated: 29 Apr 2026 07:11 PM

Background
தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகிறது. 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த ஒன்றரை மாத காலமாக...More
தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகிறது. 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த ஒன்றரை மாத காலமாக தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா நடைபெற்றது. கிராமம் முதல் நகரத்தின் மூலை முடுக்கு வரை வாக்கு கேட்டு வேட்பாளர்கள் தொடங்கி கடைக்கோடி தொண்டர்கள் வரை வருகை தந்தனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியானது நிலவி வருகிறது. திமுகவில் மு.க.ஸ்டாலின், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியில் சீமான், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக மோதினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மொத்தம் 85.10% வாக்குகள் பதிவாகி மிகப்பெரிய அளவில் சாதனைப் படைத்தது. இந்த முறை எந்த கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் கிடைக்கப்போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. திரையில் தனக்கென பிரபலத்தைக் கொண்டுள்ள விஜய் அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைவார் என சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோரும் பலமான போட்டியாக அமைந்துள்ளதால் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. மே 4ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இன்றைய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Exit Polls 2026 LIVE: அதிமுக கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும்... இபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுதா?
வோட் வைப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 114-124 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு 103-113 இடங்களும் தவெகவுக்கு 04-10 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.