தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்க்கு ராசியான  4ம் தேதி பற்றி காணலாம். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அளவில் மக்களின் மனதை வென்றிருக்கிறது. அக்கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டது. சேலம் எடப்பாடியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது. விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் முடிவில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டாலும் விஜய்க்கு கிடைத்திருக்கும் மக்களின் ஆதரவு எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. 

விஜய்க்கு ராசியான 4ம் தேதி 

இந்த நிலையில் விஜயின் வெற்றி திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. இரண்டாம் இடத்துக்கு திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியாக திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. விஜய் இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதால் தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதனிடையே 4 என்ற எண் விஜய்க்கு ராசியாக மாறியுள்ளது. உடனே எல்லாரும் விஜயுடன் இணைத்து பேசப்படும் நடிகை த்ரிஷா விஷயம் என நினைக்கலாம். உண்மையில் தங்கள் மீதான சர்ச்சைகளுக்கு இருவரும் பதிலளிக்காமல் இருக்கும் நிலையில், அதனைப் பற்றி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாள் என்ற நிலையில், அவருக்கு விஜய் தேர்தலில் வென்று சிறப்பான பரிசை அளித்துள்ளதாக என்றெல்லாம் குறிப்பிட்டு பதிவுகளை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் விஷயம் அது கிடையாது. 

விஜயின் ராசி கடகம். ஜோதிடத்தின்படி பார்த்தால் அது ராசிகளின் வரிசையில் 4ம் இடம் பெற்றிருக்கிறது. அதேபோல் விஜய் ஹீரோவாக நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தான். தற்போது தேர்தல் முடிவுகளில் விஜய் வெற்றி பெற்றது மே 4ம் தேதி என்பது குறிப்பிட வேண்டிய தகவலாகும். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.