எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி 2026 வெளியாகி உள்ளது. இதன்படி ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகு, மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன. இந்தத் தகவலை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இருந்து வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

ஏப்.23ம் தேதி, 2026 - தமிழக சட்டமன்ற தேர்தல்

மார்ச் 30- வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

Continues below advertisement

ஏப்ரல் 06 – வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள்

ஏப்ரல் 07 - வேட்பு மனுபரீசீலனை

ஏப்ரல் 09 - திரும்பப் பெற கடைசி நாள்

ஏப்ரல் 23 - வாக்குப்பதிவு

மே 4 - வாக்கு எண்ணிக்கை

பிற மாநிலத் தேர்தல் தேதிகள்

அதேபோல புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 9ஆம் தேதி அன்று புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களுக்கும் ஒரே நாளில் மே 4 அன்று முடிவுகள் வெளியாக்க உள்ளன. 

5.67 கோடி வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 (5.67 கோடி) வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள்தான் அதிகம்.

பெண் வாக்காளர்கள்: 2,89,60,838

ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925

மூன்றாம் பாலினத்தவர்: 7,617 பேர் ஆவர்.

கடந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 234 இடங்களில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றி 38 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதிமுக 66 இடங்களைக் கைப்பற்றி 33.5 சதவீத வாக்குகளைப் பிடித்தது.

கடும் போட்டி

இந்த முறை விஜய் தலைமையிலான தவெக, முதல் முறையாக இளம் வாக்காளர்களைக் குறித்துக் களம் காணும் நிலையில், போட்டி கடுமையாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பணியில் 40 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.

அமலுக்கு வந்த நடத்தை விதிகள்

சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

முந்தைய சட்டமன்றத் தேர்தல் எப்போது?

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பின்னர் சுமார் ஒரு மாத இடைவெளியில் மே மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

முன்னதாக ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை வருவதாலும் மதுரையில் சித்திரை திருவிழா நடக்கும் என்பதாலும் ஏப்ரல் 4ஆம் வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.