தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதேபோல் சினிமா, அரசியல் என பல துறைச் சார்ந்த பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமார், ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், கமல்ஹாசன் , ஸ்ருதிஹாசன் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
வாக்களித்தபின்னர் சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களை வாக்களிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகை சிம்ரனின் எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
நடிகை சிம்ரனின் பதிவு
தனது பதிவில் சிம்ரன் " டிராமாவை தவிர்த்துவிட்டு எதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இதுவாக்குச்சாவடி. சினிமா ஷூட்டிங் கிடையாது . வாக்களிக்கும்போது நாம் அனைவரும் சமமே. வாக்களிப்பது என்பது எனது உரிமை மட்டுமில்லை எனது கடமையும் கூட" என பதிவிட்டுள்ளார் . சிம்ரன் தவெகவை விமர்சித்து இந்த பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
வாக்குபதிவு சதவிகிதம்
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணிக்கே 17.69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த வாக்கு சதவிகிதமானது 37.56 சதவிகிதமாக அதிகரித்தது. அதாவது 9 மணி தொடங்கி 11 மணி வரையிலான காலகட்டத்தில், தொகுதியான வாக்காளர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.ஒரு மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 56.81சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 11 மணிக்கு பிறகு சுமார் 17.2 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
