எல்லாரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்றும், இந்த சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரியது எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் பலரும் பங்கேற்று தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, “இன்னைக்கு நாள் ரொம்ப முக்கியமான தினமாகும். நீங்கள் எல்லாரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்று எல்லாருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் அதை செய்வார்கள் என நம்புகிறேன். வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் ஓட்டு போட வந்துள்ளார்கள் என்பது நல்ல விஷயம் தான். ஒவ்வொரு முறையும் நாம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். வெளியூரில் இருப்பவர்கள் வருகிறார்கள் என்றால் அவரவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை கையில் எடுக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

Continues below advertisement

நான் எல்லா முறையும் முதல் ஆளாக வாக்களிக்க வந்து விடுவேன். ஆனால் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்ததால் வர காலதாமதமாகி விட்டது. மற்றபடி இந்த நாளில் முதல் ஆளாக ஓட்டுப்போடுவேன். வாக்குப்பதிவு நாளன்று மிகவும் ஆர்வமாக இருப்பேன். நாம் எல்லாரும் சமம் என்பதை சொல்லும் ஒரு விஷயமாக வாக்கு உள்ளது. இங்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. 

இது ரொம்ப எதிர்பார்ப்புமிக்க தேர்தல். வாக்கு சதவிகிதம் அதிகரிக்குமா என்பது தெரியவில்லை. இருக்கும் என நம்புகிறேன். இது சமூக வலைத்தளத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் தேர்தலாகும். மாற்றம் வருமா என்பதை நான் மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் சேர்ந்து தான் சொல்ல வேண்டும். 

மேலும் என் ரசிகர்கள் யாருக்கு வேணாலும் ஓட்டு போடலாம். ஆனால் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை பற்றிய குறைந்தபட்ச புரிதலுடன் சென்று வாக்களியுங்கள்” என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.