5 ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நாள் தேர்தல் நாளாகும். இந்த முறை ஏப்ரல் 23ஆம் தேதி அதற்கான நேரம் வருகிறது. இந்த நாளில் பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும். அதாவது, தங்களின் வாக்கை வீணாக்கால் வாக்களிக்க வேண்டும். இதற்காக அரசு பல கோடிகள் செலவு செய்தாலும், உங்களுக்கான அரசு கொடுத்துள்ள ஒரே உரிமை வாக்குரிமை ஆகும். அந்த ஒரு நாளில் மாட்டும் சோம்பேறித்தனம், யார் வந்தால் நமக்கு என்ன? என்று எண்ணிக்கொண்டு இல்லாமல் மறக்காமல் வாக்களித்து விடுங்கள்.

முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க செல்லுங்கள். இந்த வாக்குரிமைதான் உங்களுக்கான ஒரு பொறுப்பை கொடுக்கும். முதல்முறை வாக்களித்து செலுத்து வந்து பாருங்கள். ஏதோ ஒரு தலையாய கடமையை முடித்த ஒரு வித உணர்வும் மகிழ்ச்சியும் கொடுக்கும். இதையெல்லாம், நடப்பதற்கு முன்பு தேர்தல் நாளான்று வாக்களிப்பது எப்படி? என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

 

வாக்களிப்பது எப்படி?

1. வாக்குச்சாவடிக்குள் செல்லும் முன்பு வரிசையில் நிற்க வேண்டும்.

2. வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு அனுமதி கிடையாது. தேர்தல் பணியாளரிடம் செல்போனை Switch off செய்து, ஒப்படைத்து விட்டு, அதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளுங்கள்.

3. வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும்

* முதல் அலுவலர்

உங்கள் அடையாள அட்டை பூத் ஸ்லிப்பை பரிசோதித்து உங்கள் பாகம் எண், வரிசை எண்ணை சத்தமாக படிப்பார்கள். அதை வேட்பாளரின் ஏஜெண்டுகள் சரிபார்ப்பார்கள்.

* இரண்டாவது அலுவலர்

இடது கை ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்து கையெழுத்தையும் பெற்றுக்கொண்டு பின்னர் ஸ்லிப் கொடுப்பார்கள். 

* மூன்றாவது அலுவலர்

வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டாளர் ஸ்லிப்பை வாங்கி பரிசோதித்து ஒரு பட்டனை அழுத்தி உங்களை வாக்களிக்க அனுமதிப்பார்கள்.

4. வாக்களிக்கும் முறை

* வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விருப்பமான வேட்பாளருக்கு நேராக உள்ள பட்டனை அழுத்த வேண்டும். பின்னர் பீப் ஒலி கேட்கும்.

* விவிபேட் மெஷின் நீங்கள் அழுத்திய சின்னத்தை காண்பிக்கும். நீங்கள் வாக்களித்து விட்டீர்கள்.

* வெளியே சென்று டோக்கனை கொடுத்து செல்போனை திரும்பப் பெறலாம்.