தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தேர்தல்:
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலானது முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, பலத்த பாதுகாப்பின் வாக்கு இயந்திரங்கள் உள்ளன.
இந்நிலையில், இன்று 2ஆம் கட்ட மக்களவை தேர்தலானது நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி மக்களவை தேர்தலானது இந்தியா முழுமைக்கும் நிறைவடையவுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.
ஆலோசனை:
ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிககையின் போது, எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தான ஆலோசனையானது, தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.