சிங்கம்புணரியில் பள்ளி மாணவர்களுக்கு வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய தனியார் பள்ளி.
தேர்தல் அனுபவங்களை பகிர்ந்த மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தனியார் பள்ளியின் மாணவர்களின் பள்ளியின் தலைவர், துணைத்தலைவர், பள்ளியின் சீர்திருத்த தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் தத்ரூபமாக நடைபெற்றது. வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டு நான்கு பூத்துகள் அமைக்கப்பட்டது. அதில் பள்ளியின் தலைவருக்கு 12 பேர், துணைத் தலைவருக்கு 10 பேர், பள்ளியின் சீர்திருத்த தலைவருக்கு 9 பேர், துணைத் தலைவருக்கு 11 பேர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனி சின்னங்கள் வழங்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் மாணவர்கள் அனைவரும் பெயர் வாரியாக வந்தனர்.
தேர்தலில் மாணவர்கள் அனைவரும் பெயர் வாரியாக வந்தனர். பெயர் சரிபார்த்து வாக்குச்சீட்டு பெற்றுக்கொண்டு கையெழுத்து பொட்டனர், தொடர்ந்து மாணவர்களின் கை விரலில் மை வைத்து தனக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இதில் பள்ளி முதல்வர், தாளாளர், பள்ளி ஆசிரியர்களும் வாக்களித்தனர்.18 வயது நிரம்பிய பின்னரே தேர்தலில் வாக்களிக்கும் நிலையில் தனியார் பள்ளியில் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது இந்த மாதிரி தேர்தல் எதிர் காலத்தில் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
