தமிழ்நாடு மாநிலத்துக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (மே 4ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். 

Continues below advertisement

திமுகவைப் பொறுத்தவரை தலைவர் ஸ்டாலினின் தளபதியாகக் கோலோச்சி வருபவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி இந்த 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

முன்னதாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை மாவட்டத்தை வசப்படுத்த, திமுக கட்சியின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. கோவையின் 10 தொகுதிகளையும் கைப்பற்றவும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராகவும் திட்டமிட்டு பக்காவாக காய் நகர்த்தினார் செந்தில் பாலாஜி. கரூர் எம்எல்ஏவாக இருந்தாலும் தேர்தலுக்கு முன்பாகவே தொகுதி இருக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீடு பார்த்து, குடியேறினார் செந்தில் பாலாஜி.

Continues below advertisement

கோவை தெற்கு தொகுதி எப்படி?

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன், தவெக சார்பில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் ஆகியோர் போட்டியிட்டனர். 11 வார்டுகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Tamil Nadu Election Results 2026 LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை லைவ்

இதில் ’’தலைவரின் தளகர்த்தரான’’ செந்தில் பாலாஜி , தபால் வாக்குகளில் முன்னிலை வகித்தார். தற்போது 7,219 வாக்குகளைப் பெற்றுள்ளார். 731 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், தவெக வேட்பாளர் செந்தில் குமார் எவ்வளவு வாக்குகளைப் பெறுவர் என்று கேள்வி எழுந்துள்ளது. 

 

கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ள நிலையில், அவர் தற்போது கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.