சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் வீதி வீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அஇபுதமமுக என்ற கட்சியை தொடங்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அஇபுதமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்கரவர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பொதுமக்கள் மத்தியில் வாக்குகளை கேட்டு பிராச்சாரம் செய்தவர்,

Continues below advertisement

அதிமுகவில் துரோகிகள் அதிகம்

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.  இப்போதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக தலைமையால் ஆட்சியை சரியாக நடத்த தெரியவில்லை என நான் முன்பு இருந்தே சொல்லி வருகிறேன். ஜெயலலிதா செயல்படுத்திய ஒரு திட்டத்தை கூட  இவர்களால் செயல்படுத்த முடியவில்லை.திமுக தனியாக வராமல் கூட்டணியுடன் வந்துள்ளனர். அந்த கூட்டணியை காணாமல் போக வைக்க வேண்டும். அதிமுகவில்  துரோகிகள் அதிகமாகிவிட்டார்கள். ஜெயலலிதா இருக்கும் போது அப்படி எல்லாம் இல்லை. மூன்று முறை முதல்வராக இருக்கிறார்கள், பிறகு வேறு கட்சிக்கு செல்கிறார்கள். எனவே அவர்களுக்கும் நம் புத்தியை புகுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்ட ஒரு இளைஞரை அதிமுக முன்னாள் அமைச்சர் கடத்திச் சென்றுவிட்டார்.இதை செய்தது அதிமுக முன்னாள் அமைச்சர் இப்போது நடப்பது திமுக அரசாங்கம் எனவே நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாகி விட்டீர்களா? என கேள்வி எழுப்பினார். என் பிரசாரத்தை ரத்து செய்ய வேண்டும் என ஒரு  வேலையை நடத்தியுள்ளார். 35 வருடமாக ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். உங்களின் ஆட்டத்துக்கு முடிவு கட்டத்தான் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  நான் இந்த சலசலத்துக்கு எல்லாம் பயப்படுபவள் கிடையாது. 

Continues below advertisement

பயப்படும் ஆள் நான் கிடையாது

ஜெயலலிதாவும் நானும் எவ்வளவோ பார்த்து விட்டு தான் வந்துள்ளோம் .நீங்கள் எங்களை கொண்டு சென்று நான்கு வருடம் சிறையில் அடைத்தீர்கள்.அப்படி எல்லாம் செய்தால் பயந்து போய் விடுவேன் என  நினைத்தீர்களா? அதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது. அதனால்தான் வந்ததை பார்த்துக் கொள்ளலாம் என  இருப்பதாக சசிகலா ஆவேசமாக தெரிவித்தார்.