சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மக்களை கவரும் வகையில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதன் படி திமுக சார்பாக 8ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன், மகளிர் உரிமை தொகை 2ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

அதிமுக, திமுக தேர்தல் வாக்குறுதி

அதிமுக சார்பாக ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, இலவச பிரிட்ஜ் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் வெளியிட்டார். இதில் 10 தலைப்புகளில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  •  மாதம் ரூ.2,000  மகளிர் பெயரில் வரவு வைக்கப்படும்
  • முதியோர் உதவித்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும், ஒரே குடையின் கீழ் நலத்திட்ட உதவிகள்
  • நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்
  • வருவாய் குறைந்த குடும்ப மாணவர்களுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி மையம்
  • அரசுப் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்பிக்கப்படும், ஆசிரியர்களுக்கு AI பயிற்சி வழங்கப்படும்.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்.