Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டும்தான் அவர்களின் சிந்தனை, முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள்- நடிகர் ரஜினி.

ஒரு நடிகரின் பின்னால் சென்று இளைஞர்கள் இறப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நடிகர் ரஜினி, இளைஞர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஏப்ரல் 8) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’நீண்ட காலமாக திரைத் துறையில் இருக்கிறீர்கள். சக நடிகராக, ஜனநாயகன் படம் முடக்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கருத்துக் கூற விரும்பவில்லை.
ஒரு நடிகரின் பின்னால் சென்று இளைஞர்கள் இறப்பதையும் அடிபடுவதையும் பார்க்க முடிகிறது. ஒரு மூத்த நடிகராக, நடிகர்கள் பின்னால் இளைஞர்கள் செல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இளைஞர்கள்தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவர்களுக்குதானே காயம் ஆகும்.
படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டும்தான் அவர்களின் சிந்தனை, முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள். அதை மட்டும் அவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குடிபோதை, கஞ்சாவுக்கு அடிமை ஆகாதீர்கள்
முதலில் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களே, தயவுசெய்து குடிபோதை, கஞ்சா ஆகியவற்றுக்கு அடிமை ஆகாதீர்கள். பிறகு உங்களின் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும்.
அது உங்களின் தாய், தந்தை, குடும்பத்தையே நரகம் ஆக்கி விடும். அத்தகைய சகவாசம் உள்ள நண்பர்களிடம் அருகே கூடச் செல்லாதீர்கள். அவர்களிடம் இருந்து தூர இருங்கள்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.





















