Puducherry Assembly Election: தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக தமிழர்கள் வசிக்கும் மாநிலமாக இருப்பது பாண்டிச்சேரி. 2001ம் ஆண்டு பிறந்தது முதலே பாண்டிச்சேரியில் திமுக ஆட்சியை வழிநடத்தவில்லை. பாண்டிச்சேரியில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்:

பாண்டிச்சேரிக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பாண்டிச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக-வே காங்கிரசுக்கு போதுமான தொகுதிகளை ஒதுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும் பாண்டிச்சேரியைப் பொறுத்தமட்டில் காங்கிரசின் கையே கடந்த கால் நூற்றாண்டுகளாக காங்கிரஸ் கையே ஓங்கியுள்ளது. 

ஆனால், ஒரு காலத்தில் பாண்டிச்சேரியும் திமுக-வின் கோட்டையாகவே இருந்தது. இதுவரை பாண்டிச்சேரிக்கு நடந்த 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறை ஆட்சியை தனது தலைமையில் நடத்தியுள்ளது. திமுக 3 முறையும், அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஒரு முறையும் ஆட்சியை தங்களது தலைமையில் நடத்தியுள்ளது. 

Continues below advertisement

திமுக ஆட்சி:

பாண்டிச்சேரி உருவானது முதலே காங்கிரஸ் கைவசமே இருந்து வந்த பாண்டிச்சேரியில் முதன்முதலாக 1969ம் ஆண்டு திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக முதன்முதலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்றியபோது அங்கு முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் எம்.ஓ.எச். பரூக். 

இவர் காலாபேட் தொகுதியில் வெற்றி பெற்று 1969ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை திமுக ஆட்சியை பாண்டிச்சேரியில் வழிநடத்தினார்.  இந்த ஃபரூக் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தவர். இவர் ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கும் பாண்டிச்சேரியில் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

அதன்பின்பு, பாண்டிச்சேரிக்கு நடந்த 6வது சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய திமுக-வின் சார்பில் பாண்டிச்சேரிக்கு முதலமைச்சராக மண்ணடிபேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற எம்டிஆர் ராமச்சந்திரன் பதவி வகித்தார். அவர் 1980ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 1983ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி வரை ஆட்சி செய்தார். 

கடைசியாக திமுக ஆட்சி பாண்டிச்சேரியில் 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை நடந்தது. அப்போது நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.வி.ஜானகிராமன் ஆட்சியை வழிநடத்தினார். அதன்பின்பு, தற்போது வரை பாண்டிச்சேரியில் திமுக ஆட்சியை கைப்பற்ற இயலவில்லை. 

26 ஆண்டுகள்:

அதன்பின்பு, காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமே ஆட்சியை அலங்கரித்து வருகிறது. மேலும், கடந்த பல வருடங்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பிடித்து வருவதால் திமுக - காங்கிரஸ் இடையே இருந்த மோதல் மாறி, காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கு கூட்டணி வகித்தது. 

கடந்த 26 ஆண்டுகளாக அதாவது 21ம் நூற்றாண்டில் திமுக தலைமையிலான ஆட்சி பாண்டிச்சேரியில் இதுவரை அமையவே இல்லை. ஆனாலும், பாண்டிச்சேரி திமுக நிர்வாகிகள் பாண்டிச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.