PM Modi TN Visit LIVE: திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் - பிரதமர் மோடி

சென்னையில் இன்று மாலை பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ள நிலையில் அதுகுறித்தான அப்டேட்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

முகேஷ் Last Updated: 10 Apr 2024 02:34 PM
திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் - பிரதமர் மோடி

திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என நீலகிரி பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். 

PM Modi TN Visit LIVE: திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை - பிரதமர் மோடி

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் தி.மு.க., பழைய அரசியலில், ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. மூன்று முக்கிய அளவுகோல்கள் - குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழ் கலாச்சார எதிர்ப்பு - பிரதமர் மோடி

PM Modi TN Visit LIVE: பாஜக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்கு, இது பிரதமர் மோடியின் வாக்கு - பிரதமர் மோடி

பாஜக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவை முன்னேற வைக்கும், தமிழ்நாட்டை முன்னேற வைக்கும் இது இந்த மோடியின் வாக்கு என வேலூரில் பிரதமர் மோடி பேசி வருகிறார். 

PM Modi TN Visit LIVE: தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

குடும்ப அரசியல், ஊழலால் திமுக தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. தமிழகத்தை திமுக குடும்பம் கொள்ள அடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக. திமுக பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி 

PM Modi TN Visit LIVE: ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்து - பிரதமர் மோடி

ஒட்டுமொத்த திமுகவும் ஒரே ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. தமிழ்நாட்டை திமுக பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தமிழகத்தை திமுக குடும்பம் கொள்ளை அடிக்கிறது - பிரதமர் மோடி

PM Modi TN Visit LIVE: நல்ல இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்து வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி

வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை நடத்தப்போகிறது.  கடந்த 10 ஆண்டுகளாக நல்ல இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்து வைத்திருக்கிறோம். - பிரதமர் மோடி

PM Modi TN Visit LIVE: 6 மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம்..!

வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

PM Modi TN Visit LIVE: தமிழ் சகோதர சகோதரிகளே! - தமிழில் உரையாற்ற முடியாததற்கு வருந்திய பிரதமர் மோடி!

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன் - பிரதமர் மோடி 

PM Modi TN Visit LIVE: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி..!

வேலூருல் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதையடுத்து, தற்போது விழா மேடைக்கு வந்தடைந்தார். 

PM Modi TN Visit LIVE: பிரதமர் வருகையொட்டி வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

பிரதமர் மோடி வேலூர் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பகல் 12 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

PM Modi TN Visit LIVE: சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்த பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்தடைந்தார். அங்கு கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில்,  பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்

PM Modi TN Visit LIVE: சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து வேலூர் புறப்பட்டார். அங்கு கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில்,  பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்

PM MODI TN VISIT LIVE : வாகனப் பேரணி, தேனாம்பேட்டையில் நிறைவு

பனகல் பார்க்கில் தொடங்கிய பிரதமர் மோடியின் வாகனப் பேரணி, தேனாம்பேட்டையில் நிறைவு

PM Modi TN Visit LIVE : அரைமணி நேரத்தைக் கடந்தது பிரதமர் மோடியின் வாகனப் பேரணி

PM Modi TN Visit LIVE : அரைமணி நேரத்தைக் கடந்தது பிரதமர் மோடியின் வாகனப் பேரணி


6.30 மணிக்கு தொடங்கிய பிரதமர் மோடியின் வாகனப் பேரணி, அரைமணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது

PM Modi TN Visit LIVE : வண்ண விளக்குகளால் அலங்காரம்

PM Modi TN Visit LIVE : வண்ண விளக்குகளால் அலங்காரம்


பிரதமர் மோடி சென்னையில் வாகனப் பேரணி செல்வதையொட்டி, பனகல் பார்க் சாலை முதல் தேனாம்பேட்டை வரையில் சாலையின் இருபுறங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் ரோட் ஷோ.. அனல்பறக்கும் சென்னை.. உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்..

PM Modi TN Visit LIVE : வேட்டி சட்டையில் பிரதமர் மோடி

PM Modi TN Visit LIVE  : வேட்டி சட்டையில் பிரதமர் மோடி. மலர்களைத் தூவி பிரதமரை பாஜக தொண்டர்கள் வழிமுழுவதும் வரவேற்றபடி இருக்கிறார்கள்.  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் விதமாக, கையில் தாமரைச் சின்னத்தைக் காட்டியவாறே செல்கிறார் பிரதமர் மோடி


 

PM Modi TN Visit LIVE : தாமரை சின்னத்தை கைகளில் வைத்து காட்டியவாறு வாகனப் பேரணி செல்லும் பிரதமர் மோடி

பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை வரை 2 கி.மீ வரை பேரணியாக செல்கிறார் பிரதமர் மோடி. தாமரை சின்னத்தை கைகளில் வைத்து காட்டியவாறு வாகனப் பேரணி செல்லும் பிரதமர் மோடி

சென்னையில் பிரதமர் மோடி சாலை அணிவகுப்பு பேரணி

சென்னையில் பிரதமர் மோடி சாலை அணிவகுப்பு பேரணி: பிரதமர் பேரணியை ஒட்டி 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

PM Modi TN Visit LIVE : பிரதமர் மோடி ரோட் ஷோ.. ட்ராபிக் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகள்..

PM Modi TN Visit LIVE: பெண்களுக்கு தலைப்பாகை கட்டிக்கொடுக்கும் பாஜக தொண்டர்..!



PM Modi TN Visit LIVE: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி சென்னை வந்ததை தொடர்ந்து, பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

PM Road Show LIVE Traffic Changes : தி நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

மாலை 3 மணிமுதல் இரவு 8 மணிவரை, ஜி.எஸ்.டி  சாலை, பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, எஸ்வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம், தி நகர் ஆகிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும்

இந்தியா கூட்டணி சக்தியை அவமதித்துவிட்டது : மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

ஆர்.எம் வீரப்பன் மறைவு : குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் இரங்கல் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை

Background

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டு காலம் நம்மை யார் ஆள போகிறார்கள் என்று தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை வருகின்ற 19ம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார்.


இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னையில் இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை ஜி.எஸ்.டி – அண்ணா சாலை, ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் – தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக மக்களுக்கு போக்குவரத்து காவல் துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி, ஜி.எஸ்.டி சாலை, மவுண்ட் - பூந்தமல்லி சாலை, CIPET சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, தியாகராய பகுதி சாலைகளை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தியாகராய நகர், வெங்கட் நாராயண சாலை, ஜி.என். செட்டி சாலை, வடக்கு போக் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் இன்று பிற்பகல் முதல் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுத்திப்பாரா செல்லும் வாகனங்கள்.

  • மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள்.

  • CIPET - அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • வடபழனியில் -தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • CIPET -விமான நிலையம், காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • அண்ணா சிலையில் - மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.