PM Modi TN Visit LIVE: இனி தமிழ் மொழியில் பிரதமர் உரை - அண்ணாமலை
PM Modi TN Visit LIVE Updates: பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இந்நிகழ்வு தொடர்பான உடனடித் தகவல்களை ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
நமோ செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமரின் அனைத்து உரைகளும் தமிழில் வெளியாகும் என அண்ணாமலை தெரிவித்டுள்ளார்.
மகளிரை மதிக்கும் கட்சி என்றால் அது பாஜக மட்டும்தான். திமுக - காங்கிரஸ் கூட்டணி மகளிரை மதிக்காது என பிரதமர் விமர்சித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் இணைந்து செய்த பாவங்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மீனவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் யார் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள அலையைப் பார்த்து டெல்லியில் உள்ள எதிர்கட்சிகளுக்கு தூக்கம் இல்லை என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சனாதனத்தை விமர்சித்தவர்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க நான் ஒருபோது அனுமதிக்கமாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை டீவியில் ஒளிபரப்பக் கூட தடை விதித்தது திமுக என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
என்னைத் திட்டுவதுதான் திமுக - காங்கிரஸின் வேலையாக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக ஒரு அரக்கன் என பிரதமர் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ரூபாய் 15 ஆயிரம் கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தை பாஜக அரசு புதுப்பித்தது. ஆனால் திமுக - காங்கிரஸ் குமரி மக்களை சுரண்ட இண்டியா கூட்டணியை உண்டாக்கியுள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குமரி மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது. பாஜக குமரியை நேசிக்கின்றது என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இண்டியா கூட்டணியால் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரமுடியாது என பிரதமர் விமர்சித்துள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழல் செய்யத்தான் போராடுகின்றது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
இண்டியா கூட்டணி ஊழல் நிறைந்த கூட்டணி என பிரதமர் மோடி தனது உரையில் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என பிரதமர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 1990ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையில் கலந்து கொண்டேன்.
பிரதமர் மோடி தனது உரையை தமிழில் பேசி தொடங்கினார்.
பிரதமர் மோடி பேசத் தொடங்கினார்.
பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணியினர் மாலை அணிவித்தனர்.
கன்னியாகுமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் யாராலும் பிரிக்க முடியாது என அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகின்றார்.
தமிழ்நாடு வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் ரூபாய் 11 லட்சம் பிரதமர் வழங்கியுள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசி வருகின்றார்.
பாஜக பொதுக்கூட்டத்தில் வரவேற்புரையை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பேசி வருகின்றார்.
பாஜக பொதுக்கூட்ட விழா மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார்.
கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்ட விழா மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பிரதமர் குமரிக்கு வருவதால் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி குமரிக்கு தனி ஹெலிகாப்ட்டர் மூலம் வந்தடைந்தார்.
பிரதமர் மோடி கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தொண்டர்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வருகையொட்டி ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது
கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாலும், பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாலும், பாஜகவினர் கன்னியாகுமரியில் முகாமிட்டு வருகின்றனர்.
பிரதமர் இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக தமிழ்நாடு வருகின்றார்.
கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Background
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகைதரவுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இந்த நிகழ்வினையொட்டி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகப்பு பணியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியான அகதீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதால் இங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விமானம் மூலம் கேரளா மாநில திருவனந்த புரத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தன் ஹெலிகாப்ட்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கி, அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகின்றார். இந்த நிகழ்வில் பாஜகவினர் மட்டும் இல்லாமல் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய பின்னர் பிரதமர் மோடி நண்பகல் 12.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்ட்டர் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவுக்குச் செல்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகைதரவுள்ளார். இதில் அரசு நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து கலந்துகொண்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடி ஒவ்வொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவை மிகவும் காட்டமாக விமர்சித்துச் செல்கின்றார். கடந்த முறை தமிழ்நாடு வந்தபோது திமுகவை ஒழிப்பேன் எனக் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்திற்கு திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மிகவும் காட்டமான விமர்சனத்தை பதிலாகக் கொடுத்திருந்தார். குறிப்பாக, “ திமுகவை நாங்கள் ரத்தம் சிந்தி உருவாக்கியுள்ளோம். திமுகவை ஒழிப்பேன் என்பவர்கள் வரலாற்றில் காணாமல் போய் உள்ளனர். ஆனால் திமுக இப்போதும் உள்ளது, எப்போதும் இருக்கும். பிரதமர் மோடியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். நான் அமைச்சராக இருப்பதால் பொறுமையாக இருக்கின்றேன். இல்லை என்றால் பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்” என கூறியிருந்தார். இதனை காரணம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார், “பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக” வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டும் இல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமரின் தமிழ்நாடு வருகையை பல காரணங்களை முன்வைத்து விமர்சித்து வருகின்றார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும், தென்மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத பிரதமர் தற்போது மட்டும் வருவது ஏன்? தேர்தலுக்காகவா? வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ஒரு ரூபாய் கூட தராத பிரதமர் இப்போது மட்டும் வருவது ஏன்? என கேள்விகளை கேட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர், வரும் 18ஆம் தேதி கோவைக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -