PM Modi On Rahul: குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக சாடினர்.
”குஜராத்தில் பாஜக வெற்றி பெறும்” - மோடி
அதன்படி, ”குஜராத்தில் நான் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தல்களில் ஆனந்த் மக்களைவை தொகுதியும், கெடா மக்களவை தொகுதியும் எல்லா சாதனைகளையும் முறியடிக்கும். 2014ல் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும் போது, குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது. நாட்டிற்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொன்னதில்லை. எனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது, 2047ல் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா 'விக்சித் பாரத்' ஆக வேண்டும்.
பாகிஸ்தான் அழுகிறது - மோடி
தற்செயலாக நடைபெறுவதை பாருங்கள், இன்று இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்து வருகிறது. வேடிக்கை என்னவென்றால், இங்கே காங்கிரஸ் இறந்து கொண்டிருக்கிறது, அங்கு பாகிஸ்தான் அழுகிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பாகிஸ்தான் இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமர் ஆக்குவதற்கு பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது. பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான இந்த கூட்டு இப்போது முழுமையாக அம்பலமாகியுள்ளது” என பிரதமர் மோடி சாடினார்.
”பிரிவினையை ஏற்படுத்தும் காங்கிரஸ்”
தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தின் அண்ணன் மகள் மரியா ஆலம் கானின் பேச்சை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, "இந்திய கூட்டணியின் தலைவர் ஒருவர், தங்கள் வியூகத்தை நாட்டின் முன் அம்பலப்படுத்தியுள்ளார். இந்திய கூட்டணி முஸ்லிம்களை வாக்களிக்க ஜிஹாத் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது படித்த குடும்பத்தில் இருந்து வந்தவர்களின் பேச்சு, மதரஸாவில் இருந்து வெளிவரும் குழந்தைகளுடையது அல்ல. இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களிக்க வேண்டும் என I.N.D.I கூட்டணி சொல்கிறது. இந்த அறிக்கையை காங்கிரஸ் தலைவர் எவரும் இதுவரை எதிர்க்கவில்லை. அவர்கள் மறைமுகமான புரிதலை வழங்கியுள்ளனர். ஒருபுறம் SC, ST, OBC மற்றும் பொது பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள I.N.D.I கூட்டணி , மறுபுறம் ஜிகாத்திற்காக வாக்களியுங்கள் என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது” என காங்கிரஸை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.