பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாமல் பொதுமக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் ராஜா தியேட்டர் மற்றும் சங்கு பகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்ற டாக்டர் பாரிவேந்தருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பாரிவேந்தர், தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.


இதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் நகரம் வெங்கடேசபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய பாரிவேந்தர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாயை, மக்களின் தேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பதாக தெரிவித்தார். தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்தால், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என பாரிவேந்தர் உறுதி அளித்தார்.


பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி யாக செய்த மக்கள் நற்பணிகள் குறித்த புத்தகத்தை வழங்கி, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்


இதனைத்தொடர்ந்து, துறைமங்கலம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது, பெரம்பலூரில் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆயிரத்து 200 ஏழை மாணவர்களை இலவசமாக படிக்க வைத்து, பட்டதாரிகளாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். மோடி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து கொண்டிருக்கிறார் என தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், ஆனால், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என விமர்சித்தார். அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதால்தான், அரச அலுவலர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார். போதைப் பொருளால் தள்ளாடி கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இந்தியாவை காக்க போகிறாரா? என கேள்வி எழுப்பிய பாரிவேந்தர், ஸ்டாலின் இந்தியாவை உடைக்கத்தான் உள்ளார் என சாடினார். தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பாதி பேருக்கு வரவில்லை என குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


பெரம்பலூர் மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து பிரசாரம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


பெரம்பலூர் மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, வேப்பந்தட்டை பகுதி பாண்டகபாடியில், IJK தலைவர் ரவி பச்சமுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளித்து, பல்வேறு நலத் திட்டங்களை டாக்டர் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். தற்போது, ஆயிரத்து 200 பேருக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர்தர சிகிச்சையும் வழங்கப்படும் என வாக்குறுதி  அளித்திருப்பதாக டாக்டர் ரவிபச்சமுத்து சுட்டிக்காட்டினார்.10 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்துள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். தொகுதி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தர, டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.


இதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டை பகுதியின் சிறு நிலா ஊராட்சியில், டாக்டர் பாரிவேந்தருக்காக வாக்கு சேகரித்த IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அமைச்சர்களுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். மீண்டும்  அவரை வெற்றிபெறச் செய்தால், தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவார் என ரவிபச்சமுத்து உறுதி அளித்தார். இலவச உயர்கல்வி, இலவச உயர் சிகிச்சை, வேலைவாய்ப்பு முகாம் என பல்வேறு பொன்னான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.


பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  மாடக்குடி கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், ஆயிரத்து 200 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் என உறுதி அளித்தார். பள்ளி விடை - பை பாஸ் சாலையில் சப்வே பாலம் கட்டி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.


இதனைத்தொடந்து, V. துறையூர் கிராமத்தில்  பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாரிவேநத்ர், தமிழ்நாட்டில் உள்ள 38 திமுக எம்பிகள் 75 சதவீதம் மத்திய அரசு வழங்கிய  நிதியை செலவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் MP நிதியை தொகுதி மக்களுக்கு, தாம் முழுமையாக செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.


பின்னர் ரெத்தினங்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனையடுத்து, மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


இதனைத்தொடர்ந்து, மேல பெருங்காவூர் கிராமத்திலும், கீழப்பெருங்காவூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


நகர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார், "ஜெயிக்கிறார் ஜெயிக்கிறார்" பாரிவேந்தர் ஜெயிக்கிறார்" என்று முழக்கமிட்டு வாக்கு சேகரித்தார்.


இதனைத்தொடர்ந்து நகர் கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய  டாக்டர் பாரிவேந்தர், 2019  தேர்தல் வாக்குறுதியின்படி, 118 கோடி ரூபாய் செலவில், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகவும், அந்தத் திட்டம் மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த பாரிவேந்தர், இப்பகுதி மக்களின் கோரிக்கையான தடுப்பணை மற்றும் மயானப் பாதை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.


இதனைத்தொடர்ந்து, நெய்க்குப்பை ஊரில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், நாடு உயர, வளர தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் MP-ஆக செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டதாகவும், மக்களுக்கு உதவி செய்யவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தேடி தேடி உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் எனக் கூறிய பாரிவேந்தர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி,118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார். ஜனநாயகம் காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களும்  ஊழல்வாதிகள் என்றும், அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்தார். ஆன்மீகத்திற்கு விவேகானந்தர். அரசியலுக்கு மோடி என புகழாரம் சூட்டிய பாரிவேந்தர், உலக நாடுகள் மோடியை பார்த்து Boss என்று அழைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.


பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிழம்பாடி வடக்கு ஊராட்சியில் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர். தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


இதனைத்தொடர்ந்து, புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.


பின்னர் குமுளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கும்ப மரியாதை வழங்கியும், ஆரத்தி எடுத்தும் டாக்டர் பாரிவேந்தரை பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், நன்றியுள்ள இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். குமுளூர் கிராமத்தில், 5 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருவதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து, புஞ்சை சங்கேந்தி பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெங்கடாஜலபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, விவசாய சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்கதிர்கள், செங்கரும்பு வழங்கியும், பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். உழவு மாடுகளை ஏர் பூட்டி, டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார். இ.வெள்ளனூர் மற்றும் நஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், நல்லவர்கள் யார்? ஊழல்வாதிகள் யார்? என்பதை அறிந்து வாக்களியுங்கள் என்றும், மறந்தும் சூரியனுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.


இதனையடுத்து லால்குடிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்து மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை, முழுமையாக செலவு செய்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் செய்த பணிகள், அமைச்சர்களை சந்தித்தது உள்ளிட்டவைகள் குறித்து, புத்தகமாக வழங்கியிருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.