சேலம் மாநகர் கோட்டை பகுதியில் சேலம் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மனோஜ் குமார் மற்றும் அபிநயாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசியது, "காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்கு செலுத்தக் கூடாது என்று நான் சொல்கிறேன். கச்சத்தீவை எந்தவித விவாதம் நடத்தாமல் இலங்கைக்கு கொடுத்தது. இதனால் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது. கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலில் கொண்டு போய் வைத்தது காங்கிரஸ்தான். காஷ்மீர் ஒரு பக்கத்தை சீனாவுக்கு எடுத்துக் கொடுத்து துரோகம் செய்தது. காவிரி ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. பாஜக ஆண்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. தமிழகத்தின் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் அவர்களது உரிமையை மதிக்க வேண்டும். இல்லை என்றால் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை மக்கள் உருவாக்க வேண்டும். பத்து சீட்டுகளில் காங்கிரசை தோற்கடித்து காட்டுங்கள். ஏன் என்று கேட்டால் உரிமையை நிறைவேற்றவில்லை. பதில் சொல்லுங்கள். ஒரு மாநிலத்தின் காவிரி நதிநீர் உரிமையை பறிகொடுக்க காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தயார் நிலையில் உள்ளது. எவ்வளவுதான் அடியை தாங்குவீர்கள் திருப்பி அடித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் அவ்வாறு அடியுங்கள் என்றார்.



எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி; ஆளுங்கட்சி ஆக இருக்கும்போது வெல்கம் மோடி என்கிறார்கள். ஆடுகள் போன்று அறுக்க போறவர்களை மக்கள் நம்புகிறார்கள் என்பது வேதனை. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் உள்ளிட்ட யாரும் பேசவில்லை. கிறிஸ்தவர்கள் அதிகம் நிறைந்துள்ளதால் பாஜக அதைப்பற்றி பேசவில்லை. கலவரத்திலே கட்சி வளர்த்தவர்கள் இவர்களால் கலவரம் இல்லாமல் இருக்க முடியாது. மறந்துகொண்டே இருப்பது தான் மக்கள். தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் போராளிகளின் செயல். உதய சூரியனை அழுத்தி வாக்களிக்காதீர்கள், வாக்களித்தால் எல்லாம் பிரச்சனைகளும் வரும். ஈழத்தில் பிரபாகரன் இருக்கும்போது சிங்களர்கள் ஈழதமிழர்களை தொடவில்லை. ஈரோடு, சென்னையில் வடஇந்தியர்கள் அதிகம் வந்துவிட்டார்கள். அவர்கள் வாக்களித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் நிலை வந்துவிட்டது. வடஇந்தியர்கள் ஒன்றை கோடி பேர் வந்து விட்டார்கள். நிலத்தை விட்டு விடாதே. தமிழ் தாயகத்தை விட்டு விடாதே. இருக்கும் இடத்தை நிலையாக வைத்துக் கொள். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மொழிகளிலிருந்து உங்களை வெளியேற்றி வருகிறார்கள், இது தொடர்ந்து கடவுளை வழிபடுவதில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். கவனமாக இருங்கள்;கோவில் வழிபாட்டுத்தளம் மட்டுமல்ல வரலாற்று தளம். நிலத்தை இழந்தால் வளத்தை இழப்பீர்கள். வளத்தை இழந்தால் நாட்டை இழப்பீர்கள். நிலத்தை விட்டுவிட்டால் இந்தி பேசும் மற்றொரு மாநிலமாக தமிழகம் மாறிவிடும். தமிழகத்தில் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது என்ன செய்தார்கள். கிளியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போன்று தான் என் மக்கள் ஏமாந்து வருகிறார்கள். சீட்டை எடுப்பதற்கு கிளிக்கு ஒரு நெல் கொடுப்பது போன்று மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களித்து ஏமாறாதீர்கள். ஐந்து ஆண்டுகள் வீணாகத்தான் போகும்.



திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது பாஜக சமூக நீதிப் பேசிக் கொண்டிருந்ததா என்று கேள்வி எழுப்பினார். அடுத்த கட்சிகளை பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பு, அதற்கான தகுதியை வைத்துக்கொண்டு பேசுங்கள். தேர்தலை சாதாரணமாக கடந்த போககூடாது; எதற்காக இந்தியா கட்சி. அந்தந்த மாநிலத்தை அந்தந்த மாநில கட்சிகள் ஆள வேண்டும். பிரதமர் மோடி அடுத்த 10 ஆண்டுகள் வந்தால் மக்களுக்கு விஷம் கொடுத்து விடுவார். திமுக என்பது திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக என்பது அனைத்திந்திய அளவில் திருடர்கள் முன்னேறுகின்ற கழகம் என்றும் விமர்சனம் செய்தார். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் நாட்டிற்கு விஷ செடிகள். இதை வளர விடக்கூடாது அழித்துவிட வேண்டும். இருக்கும் நிலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். வரலாற்றில் எத்தனையோ மாற்றம் நடந்துள்ளது. எல்லாம் மாறும். கடந்த காலங்களில் பல்வேறு சாம்ராஜ்யங்கள் சரிந்துள்ளது. திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாமல் பேசி வருகின்றனர். உன்னால் முடியும் தம்பி, தம்பி என்று சீமான் பாடல் பாடினார். பாடல் பாடபாட தொண்டர்கள் பொதுமக்கள் கரகோஷங்களை எழுப்பினர். பாடல் பாடி முடித்த பிறகு; உன்னால் முடியும், என்னால் முடியும். நம்பினால் மாற்றம் நிகழும் மக்களே, மாற்றம் என்பது ஒரு புள்ளியில் தான் துவங்கியுள்ளது. வென்று விடுவோமோ என்று யோசிக்காதீர்கள், முடியாது என்பது முட்டாள்கள் எண்ணம்; முடியும் எல்லாம் முடியும். மக்கள் எல்லோருக்கும் வாக்கு செலுத்தி பார்த்துவிட்டீர்கள், ஒரு நொடி சிந்தனையை மாற்றி நாம் தமிழர் கட்சியின் வாக்களியுங்கள் பிடிவாதம் பிடிக்காதீர்கள். வட மாநிலத்தில் வாக்கு இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்று அதிகாரி ஒருவர் பட்டனை அழுத்திப் பார்க்கிறார். எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கு விழுகிறது. நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதற்காக தேர்தல் என்றால் சரியாக இருக்காது. இது புரோக்கரை தேர்வு செய்வதற்கான தேர்தல். நாம் ஏற்றுக் கொண்ட பொருளாதார கொள்கை வாடகைத்தாய் பொருளாதார கொள்கை. கர்ப்பப்பை, குழந்தை பெற்றெடுப்பது உங்களுடையது. ஆனால் குழந்தையை மற்றொருவர் எடுத்து சென்று விடுவார். மேக்கிங் இன் சைனா, மேக்கிங் இன் ஜப்பான் போன்று மேக்கிங் இந்தியா என்பதற்கு இதுதான் அர்த்தம். ஓட்டு போடும் பெண்ணே ஒதுங்கி நிக்காதே; கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிற்காத; உழைக்கும் மக்கள் சின்னம், இந்த ஒலிவழங்கி சின்னம் என்று பாடல் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.