அவருடைய கனவு ஹீரோ புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர். பாடல்கள், வரிகள் அவருடைய டயலாக் எல்லாத்தையும் மனப்பாடமாக வைத்துள்ளார்.
என்னுடைய வெற்றிக்கு பின்னால் என் கணவர் குஷ்பு EMOTIONAL SPEECH
மதுரை மத்திய தொகுதியில் NDA-கூட்டணி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்றது. அப்போது வேட்பாளர் சுந்தர் சிக்கு ஆதரவாக நடிகை குஷ்புவும், கூட்டணி கட்சியின் முகமாகவும் உள்ள அவர் மேடையில் பேசினார்...," அரசியல் எனக்கு புதுசு கிடையாது. ஆனால் என் கணவருக்காக ஒரு துணைவியாக நான் பேசுவது புதிதாக இருக்கிறது. ஒரு நல்ல அரசியல்வாதி வீட்டில் இருக்கும் போது, இன்னொருவர் வேண்டாம் என்று சொல்வோம். ஆனால் திடீரென்று நான் தேர்தல் களத்தில் இறங்குகிறேன் என சுந்தர் சொன்னார். அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆணுக்கு எப்படி பெண் பக்கபலமாக இருப்பாரோ அதுபோல என்னுடைய கணவர் எனக்கு பக்கவாளமாக இருந்தார். எனக்கு அடிக்கடி தைரியம் கொடுபது சுந்தர்தான். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல், என்னுடைய வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார்.
தனிப்பட்ட வெற்றியாக இருக்க வேண்டும்
இது அவருக்கான தேர்தல் இல்லை. நிஜத்திற்கும் - பொய்ப்பித்தலாட்டத்திற்கும் எதிரான தேர்தல். தேர்தலுக்கு பின் சேவை செய்வேன் என ஏமாற்றியவர்களுக்கான எதிராக களம் காண்கிறார். 30 ஆண்டு கால சினிமாவில் சின்ன கரை கூட படியாத நல்ல மனிதராக இருந்திருக்கிறார். எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு இந்திய கூட்டணி உள்ள அனைவரும் இருக்கிறீர்கள், தனிப்பட்ட முறையில் சொல்ற மாதிரி இந்த வெற்றி நம்ம வெற்றியாக இருக்க வேண்டும். மதுரை மக்களின் வெற்றியாக இருக்க வேண்டும். என்னுடைய கணவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார் அவருக்கு அதைவிட வேறு ஒரு பெருமை இல்லை. எனக்கு அறிமுகமான காலத்தில் இருந்து தெரியும். அவருடைய கனவு ஹீரோ புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர். பாடல்கள், வரிகள் அவருடைய டயலாக் எல்லாத்தையும் மனப்பாடமாக வைத்துள்ளார்.
