தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் - தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் சசிகலா - ராமதாஸ் கூட்டணியினரும் போட்டியிடுகின்றனர்.

Continues below advertisement

பூண்டி கலைவாணன்:

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைத் தொடரும் நோக்கத்தில் திமுக மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். திருவாரூர் சட்டமன்றத்  தொகுதியில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பது குறித்து தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும்  திராவிட முன்னேற்ற கழகம் நிர்வாகிகளுடன் செயல்வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, நமது மதச்சார்பற்ற கூட்டணி தோழமைக் கட்சியுடன் இணைந்து மிகவும் உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது பூண்டி கலைவாணனுக்கு திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் போது தலைவர்(மு.க.ஸ்டாலின்) மிகுந்த நம்பிக்கை உடன் வாய்ப்பளித்தார். மக்களுக்கு மிகவும் நம்பிக்கையானவர்.

Continues below advertisement

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி:

மக்கள் வாக்களித்தபோது தலைவர் கருணாநிதியை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என எண்ணக் கூடியவர். எந்த ஒரு விஷயத்தையும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். திருவாரூர் மக்களிடம் மிகவும் பாசத்திற்குரியவர் பூண்டி கலைவாணன். மூன்றாவது முறையும் திருவாரூர்  தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தோழமைக் கட்சியுடன் இணைந்து அனைவரும் ஒன்றுபட்டு வாக்கு சேகரிக்க வேண்டும். 

எனக்கு கொடுத்துள்ள 41  தொகுதிகளிலும் இன்று கூட்டம் நடைபெற்ற வருகிறது. செல்லும் இடமெல்லாம் கழகமும் நமது தோழமைக் கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் கழகம் வரும் கழக ஆட்சி பொறுப்பேற்கும் தளபதி (மு.க.ஸ்டாலின்) இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

இவ்வாறு திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகிறது. கூட்டணி கட்சியினர் அளித்த ஆட்சியில் பங்கு நெருக்கடி காரணமாக இந்த தேர்தலில் தனித்து வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் திமுக உள்ளது.

திருச்சி மண்டலத்தில் உள்ள தொகுதிகளுக்கு கே.என்.நேரு மேற்பார்வையில் பரப்புரை பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.